ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை செயல்பட தொடங்கியதில்இருந்து அங்கு இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் ஆலை இருக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்ட்டனர்.


அப்பகுதி நிலத்தடி நீரும் காற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெகுண்டெழுந்த பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பல நாட்கள் போராட்டம் அமைதியாக நடந்தது. ஒரு கட்டத்தில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றபோது, திடீரென பதற்றம் உருவானது.அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஒருநபர் ஆணையம் விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அரசு துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை நடந்தது.

ரஜினிகாந்த் விளக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். இதனால் நடிகர் ரஜினிகாந்தும் ஆஜராக வேண்டும் என்று ஒருநபர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் பலகட்ட விசாரணையிலும் நடிகர் ரஜினி ஆஜராகவில்லை. தான் ஆதாரத்துடன் ஏதும் பேசவில்லை என்றும் சும்மா பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் வக்கீல் மூலம் விளக்கம் அளித்ததாக ஆணைய அதிகாரிகள் கூறினார்கள்.

இடைக்கால அறிக்கை ஒப்படைப்பு இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாறியது. தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை ஒருநபர் ஆணையம் முடித்துள்ளது.

இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதியும், விசாரனை ஆணையத்தின் தலைவருமான அருணா ஜெகதீசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் தற்போது ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Share Tweet Send
0 Comments
Loading...