ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவிய இஸ்ரோ

ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவிய இஸ்ரோ

ஆக்சிஜன் உற்பத்திக்கு உதவுவதற்காக இஸ்ரோ நிபுணர் குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனம்.

கொரோனா இரண்டாம் ஆலையால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மட்டுமல்லாமல் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவையும் பெரும் பிரச்சினைகளாக உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடுகளை கண்காணிக்க மேற்பார்வை குழு அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உதவுவதற்காக இஸ்ரோ நிபுணர் குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு இருக்கும் தடைகளை சரிசெய்வதற்கு இஸ்ரோ நிபுணர் குழு சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...