சூரரைப்போற்று குறித்து சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் முன்னோட்டம் இம்மாதம்(அக்) 26 அன்று காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது. இதனை சூர்யா அவர்கள் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்றோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் முன்னோட்டம்( Trailor) எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்டம்  இம்மாதம் 26 இல் காலை 10 மணிக்கு வெளியாகும் என சூர்யா அறிவித்துள்ளார். இது அவர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...