🌟உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை யோகா தினமாக அறிவிக்க 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவிற்கு கோரிக்கை விடுத்தார். இதை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநா ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
🌟2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளானது 'வீட்டில் யோகா மற்றும் குடும்பத்துடன் யோகா' என்பதாகும். கடந்த ஆண்டு உலகம் முழுவதுமே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யோகா ஆசனங்கள் மக்கள் மனதை நிதானமாக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைக்க நம்பிக்கையின் கதிர்களைக் கொடுத்தது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'நல்வாழ்வுக்கான யோகா' என்பதாகும்.