சப்ஜா விதையின் பயன்கள்

சப்ஜா விதையின் பயன்கள்

திருநீற்றுப்பச்சிலை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று  அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில்  ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

இதில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், துத்தநாகம் சத்துக்கள் இருப்பதினால் பித்தத்தைப் போக்கி உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. அதேபோல் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை  நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.

ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. ‌

‌ மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை  குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம். கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’  என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை (how to use)‌‌

சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும் முதல் நாள் இரவில் ஊற வைத்து பின்னர் அடுத்த நாள் பயன்படுத்தலாம். சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் நல்லது. அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதில் அதிகளவு பைபர் காணப்படுகிறது. இந்த பைபர் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று காணப்படும். வழவழப்பாக காணப்படுவதை வெறுதாக விதையை மட்டும் சாப்பிட சிலருக்கு பிடிக்காது அதனால் ஊறிய விதையை லெமன் ஜூஸ், பலூடா மற்றும் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.

சப்ஜா விதையின் பயன்கள்(benifits of sabja seeds) ‌‌

சப்ஜா விதையில் ஒமேகா 3 அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. மேலும் நார் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு இந்த விதை சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் உணவு பாதையில் ஏற்படும் புண்களை இந்த விதை போக்குகிறது. தொடர்ந்து சப்ஜா விதையை சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்படும். வைட்டமின் ஏ, பி காம்ப்லெக்ஸ், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் பித்தம் மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை வாய்ந்தது.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது (who do not eat?)‌‌

குழந்தைகளுக்கு சப்ஜா விதையை (sabja seeds) கொடுப்பதை தவிர்க்கலாம்.  கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க கூடாது. மேலும் பெண்களின் ஈத்திரோசன் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே இளம்பெண்கள் குறைந்த அளவில் எடுத்து கொள்ள வேண்டும். அதே போல் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் செய்ய இருப்பவர்கள் சப்ஜா விதையை தவிர்ப்பது நல்லது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

இதில் குறைவாக கலோரிகள் உள்ளதால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. ஒரு நாளுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் இந்த சப்ஜா விதை சாப்பிடுவதனால் நமக்கு கிடைக்கிறது. இதை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. இல்லை எனில் குறைந்தது 6 மணி நேரம் வரை இந்த விதை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இது நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் இதை நீரில் ஊற வைத்து எலுமிச்சை சாறு அல்லது பால் இல்லையெனில் ஐஸ்கிரீம் உடன் சேர்த்து சாப்பிடலாம்.‌‌

கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆரம்பகால கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதன் மூலம் கரு கலைய வாய்ப்பு உள்ளது. இது அதிகமாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சப்ஜா விதை குளிர்ச்சி தன்மை அதிகமாக இருப்பதினால் சைனஸ், ஜலதோஷம் பிரச்சனை உள்ளவர்கள் இதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சப்ஜா விதையின் பயன்கள்

 • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
 • வயிற்றுப்புண் பிரச்சனைக்கு சப்ஜா விதை நல்ல ஒரு மருந்து.
 • சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
 • சப்ஜா விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. உடல் சூட்டை குறைத்து நமது உடலை சீரான வெப்பநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. எனவே இதை கோடைகாலத்தில் மட்டுமல்லாமல் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுத்தலாம். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இதை மதியம் இளநீரில் போட்டு குடிக்கலாம்.
 • பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை (LEUCORRHEA) குணப்படுத்த உதவுகிறது.
 • மூலநோயால் (Hemorrhoids) பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். மூலநோய்க்கு நல்ல ஒரு மருந்து.
 • மஞ்சள் காமாலை (Jaundice) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை இளநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நோயின் பாதிப்பு குறையும்.
 • பித்தத்தை குறைக்க உதவுகிறது.
 • மலச்சிக்கல் (Constipation) நோயால் அவதிப்படுபவர்கள் பாலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை போட்டு சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு நல்ல ஒரு மருந்து.
 • சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், சிறுநீரக எரிச்சல் (Kidney irritation) மற்றும் சிறுநீர் தொற்று (Urinary tract infection) போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
 • வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல், வாயு பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
 • ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

Share Tweet Send
0 Comments
Loading...