ரூபாய் பற்றிய 24 சுவாரஸ்யமான உண்மைகள்..!

ரூபாய் பற்றிய 24 சுவாரஸ்யமான உண்மைகள்..!

நவம்பர் 1994 ஆம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சிட அதிக செலவு ஆகிறது என்ற காரணத்திற்காக நிறுத்தப்பட்டது. இதனால் அதிக மதிப்பு உள்ள கரண்சிகள் அதிகம் அச்சடிக்கப்பட்டன.

 1. இப்போது 20 வருடங்கள் கழித்து மீண்டும் 1 ரூபாய் நோட்டு அச்சிடப்படுகிறது. எனவே ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
  இன்று நாம் மிகவு ஆச்சர்யமான பலருக்கும் தெரியாத இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி தெரிந்துகொள்ள உள்ளோம்.
 2. முதல் பேப்பர் கரண்சி
  இந்தியாவின் முதல் பேப்பர் கரண்சி 18 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹிந்துஸ்தான் வங்கி, பெங்கால் வங்கி, பாம்பே வங்கி, மெட்ராஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த ரூபாய் நோட்டுகளை முதலில் அச்சிட்டன.
 3. அதிக மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகள்
  1938 ஆம் ஆண்டு ஆர்பிஐ 10,000 ரூபாய் நோட்டு தான் இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டாகப் பார்க்கப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் 1946 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் செல்லது என்று அறிவிக்கப்பட்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
 4. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934
  நடப்பில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934-இன் படி ஆர்பிஐ வங்கியினால் 5000 ரூபாய் நோட்டு மற்றும் 10,000 ரூபாய் நோட்டுவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு இணங்க அச்சிட இயலும். ஆனால் 10,000 ரூபாய்க்கும் அதிக மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட அனுமதி கிடையாது.
 5. ரூபாய் நோட்டுகள் எதில் செய்யப்படுகின்றது?
  பேப்பர் இல்லை, ரூபாய் நோட்டுகள் பருத்தி மற்றும் பருத்தி துணியிலான பொருட்களினால் தயாரிக்கப்படுகின்றது.
 6. ஞாபகார்த்த நாணயங்கள்
  இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் இது போன்று நாணயங்கள் வெளியிடப்பட்டன.
  2010 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ வங்கியின் 75 ஆண்டைக் குறிக்கும் சின்னமாக 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
  2011 ஆம் ஆண்டு ரபேந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணமாக 150 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
  2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சையில் உள்ள 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த பிரகதீஷ்வரர் கோவிலின் நினைவாக 1000 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
 7. 2011, நாணய சட்டம்
  2011 ஆம் ஆண்டின் நாணயம் சட்டப்படி 1000 ரூபாய் நாணயம் வரை வெளியிட இயலும்.
 8. 15 மொழிகள்
  இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ரூபாய் நோட்டுகளின் மதிப்பைக் குறிப்பிடுவது மட்டும் இல்லாமல் 15 மொழிகளில் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு அச்சிடப்பட்டு இருக்கும். அதில் தமிழ் 13 வது இடத்தில் அச்சிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 9. ரூபாய் குறியீடு
  2010 ஆம் ஆண்டு டி.உதய குமார் என்பவரால் ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
  இந்தக் குறியீடு தேவநாகரி எழுத்தின் ரா(र) என்பதில் இருந்து ஒரு இணை கோட்டை சேர்த்து வடிவமைக்கப்பட்டு இருந்தது. கோட்டைச் சேர்த்ததற்கான காரணமாக நமது தேசிய கொடியின் மூவர்ணத்தைக் குறிக்கவே இப்படை வடிவமைத்தாக கூறினர்.
 10. பார்வையிழந்தவர்களுக்கு
  பார்வையிழந்தவர்களுக்குக் குறியீடாக பழைய ரூபாய் நோட்டுகளில் இடது பக்கமும், புதிய ரூபாய் நோட்டுகளில் வலது பக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
  பழைய 1,000 ரூபாய் நோட்டில் டயமண்ட் குறியீடும், பழைய மற்றும் புதிய 500 ரூபாயில் வடாமாகவும், 100 ரூபாய் நோட்டுகளில் முக்கோணமாகவும், 50 ரூபாயில் செவ்வகமாகவும், 20 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் சதுரமாகவும், 10 ரூபாயில் எந்தக் குறியீடும் இல்லாமலும் இருபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 11. ரூபாயில் ஏற்பட்ட மர்மம்
  2007 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வணிகர்கள் சில்லறைக்காக பிச்சைக்காரர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்போது 120 ரூபாய் கொடுத்து 100 ரூபாய் சில்லறை பெறும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
 12. 1 ரூபாயின் மதிப்பு 5 ரூபாய்
  கொல்கத்தாவில் நாணய தட்டுப்பாடு ஏற்பட்ட போது விசாரணை நடத்தியதில் நாணயங்கள் உறுக்கப்பட்டு வங்கதேசத்திற்குக் கடத்தப்பட்டதும், பின்னர் அது அங்கே ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்து 5 முதல் 7 பிளேடுகள், நகைகள், பேனா நிப்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஒரு ரூபாய் 35 ரூபாய் வரை விற்கப்பட்டுது என்று கூறப்படுகிறது.
 13. நாணயங்களுக்குப் பதிலாக அட்டை டோக்கன்கள்
  கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நாணய தட்டுப்பாட்டை குறைக்க அட்டை டோக்கன்கள் வழங்கு நிலையும் ஏற்பட்டது. இந்த அட்டை டோக்கன்களும் ரூபாய் நாணயங்கள் போலவே வடிவமைக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 14. 1947 ஆண்டு ரூபாய் மற்றும் டாலர் மதிப்பு
  1947 ஆம் ஆண்டு அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சமமாக இருந்தது, ஆனால் இப்போது நிலைமையே வேறு.
 15. ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள்
  ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர், சல்போனி போன்ற இடங்களில் அச்சிடப்படுகின்றன. நாணயங்கள் மும்பை, நொய்டா, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.
 16. நாணய தயாரிப்பு குறியீடு
  ஒவ்வொரு நாணயம் எங்குத் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து குறியீடும் உள்ளன, அவை நாணயத்தின் கீழ் குறியிடப்பட்டு இருக்கும்.
  டெல்லி- புள்ளி
  மும்பை- டைமண்ட்
  ஹைதராபாத்- நட்சத்திரம்
  கொல்கத்தா- எதுவும் இல்லை
 17. அரிய 5 ரூபாய் நோட்டு
  1916 ஜனவரி 5 ஆம் தேதி இந்திய அரசு கராச்சியில் வெளியிட்ட அரிய 5 ரூபாய் நோட்டு சென்ற ஆண்டு லண்டனில் ஏலம் விடப்பட்ட போது 5,297 அமெரிக்க டாலருக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.
  1947 ஆம் ஆண்டு வரை கராச்சி இந்தியாவில் இருந்தது.
 18. அணாவும் பைசா
  ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலகட்டத்திலும் பிறகு முதல் சுதந்திர ஆண்டு கொண்டாடும் போதும் ரூபாய் மதிப்பு 16 அணாவாக வகுக்கப்பட்டது. 1 அணா என்றால் 4 பைசா.
  1957 ஆம் ஆண்டு ரூபாயை 100 நையா பைசா என்று வகுத்தனர். அதாவது 100 புதிய பைசா. சில ஆண்டுகளுக்குப் பிறகு நையா மட்டும் மறைந்து போனது.
 19. ஆர்பிஐ வங்கியின் முதல் ரூபாய் நோட்டு
  1938 ஜனவரி மாதம் தான் ஆர்பிஐ முதன் முதலாக 5 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் ஆறாவது கிங் ஜார்ஜ் உருவப்படம் இருந்தது.
 20. பிரிட்டிஷ் இந்திய நாணயம்
  பாக்கிஸ்தான பிரிந்த கால கட்டத்தில் இந்திய பிரிட்டிஷ் நாணயத்தில் பாகிஸ்தான் என்று அச்சிட்டு 1948 வரை நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது.
 21. 500 மற்றும் 1,000 ரூபாய்
  முதன் முதலாக 500 ரூபாய் நோட்டு 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1,000 ரூபாய் நோட்டு 2000 ஆன் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  2010-2011 ஆம் ஆண்டு மட்டும் 1,385 டோடி ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 22. 1 ரூபாயும் 50 பைசாவும்
  சம்பளம் மற்றும் பெறும் தொகையான பணம் அளிக்கும் போது 1 ரூபாய் முதலே கொடுக்கப் பட வேண்டும் என்றும், 50 பைசா 10 ரூபாய் வரையிலான பண பரிமாற்றத்திற்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
 23. பழைய நோட்டுகள் எப்படி அளிக்கப்படுகின்றன?
  இது குறித்து ஆர்டிஐ ஆர்வலர் மனோராஜன் ராய் கேட்ட கேள்விக்கு 11,661 கோடி ரூபாய் நோட்டுகள் 2001 முதல் இப்போது வரை அதன் பயன்பாட்டு மதிப்பை இழந்துள்ளதாகவும் அவை துண்டாக்கப்பட்டு ஒன்றோன் ஒன்றாக இனைத்து ஒட்டி பேனா ஸ்டேண்டு, சங்கிலி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 24. சச்சின் டெண்டுல்கர் நாணயம்
  2013 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தங்க நிறுவனம் சச்சின் டெண்டுல்கர் தங்கம் மற்றும் வெள்ளி நாணயத்தை அக்ஷய திரிதியை முன்னிட்டு வெளியிட்டது. அதன் 10 கிராமின் மதிப்பு 34,000 ரூபாய் வரை விலை போனதும் குறிப்பிடத்தக்கது.
  இதேப் போன்று சச்சின் டெண்டுல்கர் தங்க நாணயத்தை 2014 ஆம் ஆண்டு பிரிட்டனின் பிரீமியம் பிறாண்டுகளின் ஆடம்பர பொருட்களுக்கான கிழக்கு இந்திய நிறுவனம் வெளியிட்டது.

Share Tweet Send
0 Comments
Loading...