வீட்டின் முன்பு இருக்க கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.
எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது.
வளரியல்பு :

நீர் செழிப்பின் காரணமாக மலைச்சரிவுகளில் ஓங்கி உயர்ந்து வளரும் மரமாக உள்ளது. பாலைவனப் பகுதியில் குறுமரமாகவும் காணப்படுகிறது. கடற்கரையோரங்களிலும் கூடம் பெரிய மரமாக வளருவதில்லை. எனினும் கடல்மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரப் பகுதி வரை காணப்படுகிறது. 15 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகும். நடுமரத்தில் பக்கக் கிளைகள் உருவாகி, படர்ந்து விரிந்திருக்கும். மார்ச்சு–ஏப்ரலில் பூத்துக் குலுங்கும் புங்க இலைகள் 20×15 செ.மீ அளவுடையவை. பூக்கள் அடர்ந்த 20 செ.மீ நீளம் உள்ளது. காய்கள் 4×3 செ.மீ அளவுள்ளது.
பயன்கள் :
🔷புங்கம்எண்ணெய் ஒரு பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. புங்கம்எண்ணெய் ரோசின் சோப் தயாரித்துபின் இதைப் பயிர் பாதுகாப்புநடவடிக்கைகளில் உபயோகிக்கலாம்.
🔷குழந்தைகளின்வயிற்று உப்பிசம், அசீரணக் கோளாறுகள், பேதிஆகியவற்றிற்குப் புங்க இலைச்சாறு கைகண்டமருந்தாகும். நீரிழிவு நோய்க்கும் மருந்தாகும்.
🔷 இதன்பூக்கள், இதன் விதை சருமநோய்களுக்கும் ஆறாத புண்களுக்கும் தேங்காய்ப்பாலுடன் இதன் வேரை அரைத்துப்பூச புண்கள் குணமாகும். இதன்காற்று மாசுபடுத்தலைக் கட்டுப்படுத்தும்.
🔷இதன்இலையை அரைத்து வெதுப்பி,வீங்கங்களின்மீது வைத்துக் கட்டலாம்.
🔷பூவைஅரைத்துச் சிரங்குகளின் மீது பூசிவர குணமாகும்.
🔷புங்கன்இலையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து அதை குளித்து வந்தாலும்அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள்கட்டுப்படும்.
🔷 புங்கன்இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும்குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்ககுணம் தெரியும்.
🔷புங்கன்இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப்பற்றிடலாம்.
🔷புங்கன்பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டுசிறிது நெய் விட்டு வறுத்துஇடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல்1 கிராம் வீதம் உண்டு வந்தால்பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும். புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம்நீக்க வேண்டும்.
🔷புன்னைஎண்ணெய் அனைத்து முடிப் பராமரிப்புஎண்ணெய்களிலும் பெரும்பாலும் சேர்கபடுகிறது. புன்னை எண்ணெய் முடிஇழப்பைச்சரிசெய்யவும், புதிய முடிவளர்ச்சிக்கும் உதவிபுரிகிறது. முடி அடர்த்தியாகவும் நீளமாகவும்வளர இந்த எண்ணெய் உதவுகிறது.
🔷குழந்தைகளின்பல்வேறு நோய்களுக்கு புங்க எண்ணெய் சிறந்தவீட்டு மருந்தாகப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக்கோளாறுகள், இருமல், சளி, பேதி, பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.