பப்பாளிப் பழம் & பப்பாளி இலை

பப்பாளிப் பழம் & பப்பாளி இலை

பப்பாளி வெப்பத் தன்மை கொண்டது.பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும். தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும். உடலுக்கு வெப்பத்தைத் தரும், ஆரோக்கியம் தரும், மாதவிலக்கைத் தூண்டும், பசியை உண்டாக்கும். பப்பாளிபழம், கழிச்சல் உண்டாக்கும், சிறுநீரைப் பெருக்கும், உடலை பலமாக்கும்.

ஆண், பெண் மரங்கள் தனித் தனியானவை. ஆண் பப்பாளி மரங்களில் வெள்ளை, இளம் மஞ்சள் நிறமானபூக்கள் மட்டும் கொத்தாக தொங்கும். காய்கள் இருக்காது. பெண் மரங்களில் பெரிய வெள்ளையானபூக்கள் நுனியில் தனித் தனியாக காணப்படும். பெரிய பச்சையான காய்கள், மஞ்சளான பழங்கள்பெண் மரங்களில் மட்டும் காணப்படும்.

பப்பாளி இலை, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.கட்டிகள் உடைய பப்பாளிப்பாலைப் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேகவைத்து கட்டியின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.

பப்பாளியில் புரதத்தைச் செரிப்பிக்கும் ஒரு சத்துப் பொருள் அடங்கியுள்ளது. மாமிசம்சமைப்பவர்கள் பப்பாளிக் காய் சிறிதளவு மாமிசத்துடன் கலந்து வேக வைக்க உடனடியாக கறிவேகும். பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டுவர உடல் இளைக்கும். பப்பாளிக் காயைத் தோல் நீக்கி சாம்பார் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால்பெருகும்.

பப்பாளிப் பழத்தில் வைட்டமின் “ஏ” நிறைந்துள்ளது. தினமும் துண்டு பப்பாளிப் பழம்சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். கண்பார்வை தெளிவடையும். மாலைக் கண் நோய்குணமாகும். மலம் கழிப்பது எளிதாகும். இரத்தமும் சுத்தமாகும்.

தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!

●பல்  சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

●நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய்  குறைபாடு சீராகும்.

●அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது  இவர்களை தாக்காது.

●பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில்  நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

●பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

●பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல்  பூச புண்கள் ஆறும்.

●பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.

●முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம அருமருந்து பப்பாளி.

●பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம். பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி  குணமாகும்

பப்பாளி இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் :

பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் ,கால்சியம் ,பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு சத்து என பல்வேறு அதீத சத்துக்களைக் கொண்ட உயிர் காக்கும் மருந்து தான் இந்த பப்பாளி இலை.

பப்பாளி இலையின் பயன்கள் :

1. இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

2. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு வரப்பிரசாதம் இந்த பப்பாளி இலை.

3. மஞ்சள்காமாலை நோயை குணப்படுத்த உதவுகிறது.

4.கல்லீரல் புற்று நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

5. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

6. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.

7. ஜீரணத்திற்கு உதவுகிறது.

8. உடலிலுள்ள அலர்ஜி நோயை குணப்படுத்துகிறது.

9. உடலில் உள்ள வைரஸ் ,பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும் ஒரு அருமருந்து.

10. தற்போது மிரட்டி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...