பிருத்வி முத்திரை

பிருத்வி முத்திரை

செய்முறை:

 1. விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள்.
 2. வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
 3. கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
 4. பின் பெருவிரல் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.
 5. மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
 6. இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும்.
 7. முதலில் 3 நிமிடங்கள் செய்யவும்.
 8. பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம்.
 9. காலை, மதியம், மாலை மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம்.
 10. மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இரு வேளை செய்யலாம்.

பலன்கள்:

 1. தோல் பளபளப்பாகும்.
 2. உடல், மன சோர்வு நீங்கும்.
 3. மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் உடல் எடை படிப்படியாக கூடும்.
 4. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 5. வாயு தொல்லை தீரும்.
 6. சைனஸ் நீங்கும்.
 7. மூட்டு வாதம், மூட்டு வலி தீரும்.
 8. நரம்பு பலவீனம் குணமாகும்.
 9. கழுத்து, முதுகெலும்பு திடம்பெறும்.
 10. முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.
 11. உடல் வெப்பம் சம நிலையில் இருக்கும்.
 12. உணவு எளிதில் ஜீரணமாகும்.
 13. மனதில் தெளிவு கிடைக்கும்.
 14. பொறுமை மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கும்.

Share Tweet Send
0 Comments
Loading...