பெட்ரோல் டீசலுக்கு மாற்று எரிசக்தி

பெட்ரோல் டீசலுக்கு மாற்று எரிசக்தி

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் 100யை தொட்டாலும் வியப்பு இல்லை. இந்நிலையில் மாற்று எரிசக்தி பயன்பாடு பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் மனிதர்கள் உள்ளோம். கொண்டுவரப்படும் மாற்று எரிசக்தி, சுற்றுசூழலுக்கு கேடு ஏற்படாவண்ணம் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. மாற்று எரிசக்தி பற்றிய கண்டுபிடிப்புகளில் தமிழகத்திலும் இளைஞர்கள் பல கண்டுபிடிப்புகளை முன்வைக்கின்றனர். அவற்றை காணலாம்.

இன்ஜினியர் சவுந்தரராஜன்

சிறு வயதில் இருந்தே, புதுவிதமான மிஷின்கள் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவரான சவுந்தரராஜன், டெக்ஸ்டைல் மிஷின் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரை அனைவரும் இன்ஜினியர் என்றே அழைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர் பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

தனது கடும் உழைப்பினால் என்.ஜி. ஆட்டோ மொபைல்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு இந்த நிறுவனத்தை இவர் தொடங்கினார். தற்போது இதற்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் கிளை உள்ளது.

தொழில் ஒருபுறம் இருந்தாலும், சமுதாயத்திற்கும் பயன்படக் கூடிய வகையில் நல்லதொரு கண்டுபிடிப்பைத் தந்துள்ளார் சவுந்தரராஜன். அதாவது, சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜினை அவர் கண்டுபிடித்துள்ளார். இது பற்றி ஏஎன்ஐக்கு அளித்துள்ள பேட்டியில் “இந்த இன்ஜினை உருவாக்க எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. உலகிலேயே இத்தகைய தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. ஹைட்ரஜனை எரிபொருள் ஆதாரமாக கொண்டு இயங்கும் இந்த இன்ஜின் ஆக்ஸிஜனையே வெளியிடும்.

தற்போயை நிலையில் 100 சிசி என்ற திறனுடன்தான் இந்த இன்ஜினை டிசைன் செய்துள்ளேன். வாகனம் ஓடும்போது இந்த இன்ஜின் ஆக்ஸிஜனை வெளியிடும். இதுதொடர்பான அனைத்து சோதனைகளிலும் வெற்றிகரமாக ரிசல்ட் கிடைத்துள்ளது,'' என பெருமையுடன் கூறுகிறார் சவுந்தரராஜன்.

வழக்கமாக வாகனங்களில் இண்டர்னல் கம்போசிசன் எனப்படும் ஐசி இன்ஜின் தான் தற்போது அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதில் 100 சதவீதம் பெட்ரோல் நிரப்பினால், 30 சதவீதம் மட்டுமே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் புகையாக வெளியேறி விடுகிறது. பெட்ரோல், டீசல் என இரண்டிலும் கார்பன் இருப்பதால், அதில் இருந்து வெளிப்படும் கரும்புகையானது சுற்றுச்சூழலை மாசடைய வைத்து, மக்களை நோயாளி ஆக்குகிறது.

Photo courtesy: ANI அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ஹைட்ரஜன், கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.அதனால்தான் ராக்கெட்டுகளுக்கு, ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஆனாலும், இதற்கு உலகளவில் அதிக வரவேற்பு இல்லை. காரணம் அதிக விலை.

இந்தச் சூழ்நிலையில் தான், இதற்கு நல்லதொரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார் சவுந்தரராஜன். இவருடைய கண்டுபிடிப்பான இந்த இன்ஜினே, தனக்குத் தேவையான ஹைட்ரஜனைத் தயாரித்துக் கொள்ளும்.

கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, கடின உழைப்பினால் இந்த ஹைட்ரஜன் இன்ஜினை கண்டுபிடித்துள்ளேன். இதனை, பைக், கார், பஸ், லாரி, டிரக், கப்பல், எலக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர் என, அனைத்திலும் பயன்படுத்தலாம்,” என்கிறார் சவுந்தரராஜன்.

இந்த இன்ஜினுக்கு ஃபில்லிங் ஸ்டேஷன் எதுவும் தேவையில்லை என்பது தான் இதன் மற்றொரு சிறப்பம்சம். பேட்டரிகளில் பயன்படுத்தும் டிஸ்ட்டல் வாட்டரை நிரப்பினாலே போதும். அதிலிருந்து, ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டது சவுந்தரராஜன் கண்டுபிடித்த இன்ஜின். இதன் மூலம் 100 சி.சி.,கொண்ட ஒரு பைக்கில், 10 லிட்டர் டிஸ்ட்டல் வாட்டர் ஊற்றினால், 1 கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்து விடும். இன்ஜின் திறன் அதிகரிக்கும். அதன் மூலம், 200 கி.மீ., வரை மைலேஜ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“சுற்றுச்சூழல் மாசடையாத வகையில் ஆக்ஸிஜன் மற்றும் நீராவியை மட்டுமே வெளிவிடும். என்னுடைய இந்த முயற்சி வெற்றியடைந்தால், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவு குறைக்க முடியும். இத்தகைய இன்ஜின் தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. ராயல்ட்டி அடிப்படையில் இந்த தொழில்நுட்பம், மோட்டார் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யப்பட உள்ளது,” என்கிறார் சவுந்தரராஜன்.

முதுகலை கணிப்பொறி பொறியாளர் லட்சுமணன்

திருச்சி கருமண்டபம் மாருதி நகரைச்  சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ராமசந்திரன் மற்றும் உஷா தம்பதியர் மகன் லட்சுமணன் தண்ணீர்லில் ஓடும் இரு சக்கர வாகனத்தை இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு  கண்டறிந்தார். முதுகலை கணிப்பொறி அறிவியல் முடித்திருந்தாலும் சிறு வயது முதலே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டுருந்த லட்சுமணன், பைக் மெக்கானிசம், ஆட்டோமொபைல் துறைகளிலும் டிப்ளமோ முடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கனவு திட்டமான தண்ணீரில் ஓடும் பைக் கண்டுபிடிப்பை நிறைவு செய்து அந்த பைக்ல் வலம் வரத்தொடங்கினார்.

இது பற்றி விவரிக்கும் லட்சுமணன்,

" ஒரு லிட்டர் தண்ணீரில் தாது உப்புகள் மூலமாக ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை பிரித்து எடுத்து மின்சாரமாக மாற்றி கார்பன் குழாய் மூலமாக மின்கலனை நிரப்புவதே இதன் வழிமுறை. 2ரூபாய் தாது உப்புகள் கொண்டு 420கி.மீ வரை அதிகபட்சமாக 35 கி.மீ வேகத்தில் செல்லமுடியும். மீண்டும் கலனை நிரப்ப அதிக நேரம் தேவை இல்லை. மீண்டும் தாது உப்புகளை 20கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 20நிமிடத்தில் சார்ஜ் செய்துகொள்ளலாம். இதை பைக் மட்டுமே இன்றி மின்சாரம் தேவையான இடங்களில் எங்கும் உபயோகிக்கலாம். இது என்னுடைய 13 வருட உழைப்பு. இதற்காக 13 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்" என்கிறார் லட்சுமணன்.

அரசுபள்ளி மாணவி யோகேஸ்வரி

அதே போல் திருப்பூர் அரசுபள்ளி மாணவி யோகேஸ்வரி இரண்டு ஆண்டுக்கு முன்பே இருசக்கர வாகனம், உப்பு தண்ணீரில் ஓடும் வழிமுறையை கண்டறிந்துள்ளார். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் அவர் இதனை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். உப்பு தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை பிரித்து அதில் ஹைட்ரஜன் மட்டும் எரிபொருளாக உபயோகிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தினார். இதனால் ஆக்ஸிஜன் வெளியாகும். சுற்றுசூழல் பாதிக்காது என்கிறார் யோகேஸ்வரி.

இது போன்ற ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை ஊக்கிவித்து அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே  பலரின் கோரிக்கை.


Share Tweet Send
0 Comments
Loading...