பெண்களின் ஹார்மோன்களை இயற்கை வழியில் சீராக்குதல்

பெண்களின் ஹார்மோன்களை இயற்கை வழியில் சீராக்குதல்

பெண்களின் வாழ்க்கை சுழற்சியே மிகவும் பிரமிக்கத்தக்கது. குழந்தையாக பிறந்ததில் இருந்தே பல்வேறு நிலைகளை கடந்து வரக்கூடும்.

இதில் மிக முக்கிய பங்கு தாய்மை அடையும்போது அவர்கள் சந்திக்கும் நிலையே. ஆனால் இன்று பல பெண்களால் கர்ப்பம் ஆக முடிவதில்லை. காரணம் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் குறைபாட்டாலே.

இவை இரண்டும் பெண்ணின் உடலுக்கு மிக அவசியமானவை. இவற்றை "செக்ஸ் ஹார்மோன்கள்" என்றே அழைப்பார்கள். ஒரு ஆணுக்கு எப்படி டெஸ்டோஸ்டிரோன் குழந்தை பிறக்க வழி செய்கிறதோ அதே போன்றுதான் ஒரு பெண்ணுக்கு இந்த 2 ஹார்மோன்களும் குழந்தை உருவாக உதவுகிறது.

ஈஸ்ட்ரோஜன் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் உடல் உழைப்பும் அதற்கு ஒரு கைக் கொடுத்து உதவி வந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்கு பெண்கள் சென்றாலும் அவர்களுக்கு போதிய உடல் உழைப்பு என்பது இல்லை. எல்லாமே இயந்திர மயமாகி விட்டது.

உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளை சரியாக இவர்கள் கடைப்பிடிப்பதில்லை. இதன் காரணமாக பெண்கள் சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக சிறுநீரக பிரச்னை, சர்க்கரை நோய், குழந்தையின்மை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்

ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பணியாற்றுகின்றன, எனவே ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மிக கணிச வழிகளில் உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம்.ஹார்மோன்கள் சீரற்ற நிலையில் இருந்தால் உடல் ரீதியாகவும் மனது ரீதியாகவும் பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் தவறான உணவு பழக்கமும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் என சொல்லலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை  குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் மனித உடலை பாதிப்பவை. அதோடு, நம் உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், திசுக்களின் செயல்பாடு, பாலியல் செயல்பாடு, இனப்பெருக்கம், மனநிலை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துபவை.

பெண்களுக்கு ஆண்கள்போல மீசை தாடி முளைக்கும். ஆண்கள் போலவே பீரியட்ஸ் வராது. அல்லது கோளாறாகி பிரதி மாதம் வராது. ஆண்கள் போலவே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் PCOD என்பது ‘பெண் ஆணாகும் தன்மை’.

தற்போதைய காலங்களில் வளரிளம் பெண்களிடையே PCOD மிகவும் அதிகரித்து வருகிறது. கீழ்க்காணும் முக்கிய அறிகுறிகள் மூலம் PCOD இருப்பதை அறிந்திட முடியும்

 1. மாதவிடாய் கோளாறுகள்
 2. தேவையற்ற இடங்களில் முடி முளைத்தல்
 3. முகப்பரு தோன்றுதல்
 4. உடல் பருமனாகுதல்
 5. முடி உதிர்வு
 6. மனஅழுத்தம்
 7. ஆண்மைக்குறைவு
 8. கவலை, எரிச்சல்
 9. களைப்பு
 10. வியர்வை
 11. அதீதப் பசி
 12. மறதி
 13. ஒற்றைத் தலைவலி
 14. பாலியல் உறவில் ஈடுபாடின்மை
 15. கருவுறாமை

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க இந்த 8 மூலிகைகளே போதும்.

ஆளி விதை
சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆளிவிதைப் பொடியை பழச்சாறு, மோர், வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம். இதில் நார்சத்தின் அளவு அதிகம் என்பதால், செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, ஹார்மோன் குறைபாட்டால் உண்டாகும் எடை அதிகரிப்பையும் தடுக்கும். இதிலுள்ள ஒமேகா -3 அமிலம் இதயம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

வெந்தயம்

வீட்டிலேயே ஒரு அற்புத மூலிகை உங்கள் ஹார்மோன் பிரச்சினைகளை சரி செய்கிறதென்றால் நம்புவீர்களா..? ஆமாங்க, இது உண்மைதான்.

வீட்டு சமையலில் அதிகம் உதவும் வெந்தயம்தான் இதற்கு தீர்வு தரும். பொதுவாகவே வெந்தயத்தை மாதவிடாய் வலியின் போது வலி குறைய பயன்படுத்துவோம். அத்துடன் இது ஈஸ்ட்ரோஜன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இதனால் பெண்கள் தாய்மை அடைவதற்கு பெரிதும் உதவு

எள்
எள்ளில் பைடோஈஸ்ட்ரோஜென்கள் (Phytoestrogens) நிறைந்துள்ளதால், இது மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சீராக்கும். ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கனிமங்கள், நார்சத்து போன்ற சத்துக்கள் அனைத்தும் ஒரே ஒரு டீ-ஸ்பூன் எள்ளில் கிடைத்துவிடும். சூப், சாலட் ஆகியவற்றில் இதைச் சேர்த்து உண்ணலாம். எள் எண்ணெயைச் (நல்லெண்ணெய்) சமையலுக்குப் பயன்படுத்தினால் சிறந்த பலன்களைப் பெறலாம். எள் துவையல் செய்து சாப்பிடலாம்.

சுண்டல், பட்டாணி மற்றும் பருப்பு வகைகள்
இறைச்சியில் புரதம் மற்றும் நார்சத்தின் அளவு அதிகமாக இருக்கும். இறைச்சி சாப்பிட பிடிக்காதவர்கள், அதற்கு மாற்றாகச் சுண்டலை எடுத்துக்கொள்ளலாம். சைவப் பிரியர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.

பருப்பு வகைகளில் நல்ல கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், பசியைத் தணிக்கும். ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு சீராக இருக்கவும் இவை உதவுகின்றன.

பட்டாணியில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின் சி, புரதம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இனப்பெருக்கச் செயல்பாட்டை மேம்படுத்தும். மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சுண்டல், பட்டாணி, பருப்பு வகைகள் மூன்றுமே ஹார்மோன்கள் சமநிலையில் செயல்பட உதவுபவை.

அவகேடோ
நார்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் இ, பி மற்றும் ஃபோலிக் அமிலம், நல்ல கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன. யாராக இருந்தாலும், முற்றிலுமாகக் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல. நம் உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. அது நம் ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருப்பதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். அதற்கு அவகேடோ உதவும்.

முட்டை
முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்பட வைட்டமின்கள் ஏ, டி, இ, பி 2, பி 6, பி 9 மற்றும் சில கனிமங்கள் இனப்பெருக்கச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன; ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருக்கத் துணைபுரிகின்றன; ஆரோக்கியமான சருமம் கிடைக்க வழிசெய்கின்றன. இதிலுள்ள கொலைன் (Choline) வைட்டமின் மற்றும் அயோடின் தைராய்டு, ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுபவை.

வெண்ணெய் / பசு நெய்
இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியக் கூறுகளாக விளங்குகின்றன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, உடல்நலத்தைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள்
புரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ், வெள்ளரி, சிவப்பு / வெள்ளை வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

பட்டை, மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி இவற்றிலும் ஹார்மோனைச் சமநிலைப்படுத்தும் தன்மை இருக்கிறது.

தவிர்க்கவேண்டிய உணவுகள்...
எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பிராய்லர் சிக்கன், வெள்ளைச் சர்க்கரை, மது, கெஃபின் நிறைந்த பானங்கள், கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை ஹார்மோன் குறைபாடுகள் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


Share Tweet Send
0 Comments
Loading...