பாதாம் பிசின்

பாதாம் பிசின்

Almond gum என்று ஆங்கிலத்திலும், பாதாம் கோந்து என்று ஹிந்தியிலும் பாதாம் பிசின் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறது. பாதாம் பிசின் துருக்கி, ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து தான் இந்தியாவிற்க்கு அதிக அளவில் இறக்குமதி ஆகிறது.

வட இந்தியாவோடு ஒப்பிடும்போது நமது பாதாம் பிசின் பயன்பாடும், அதனைப்பற்றிய அறிவும் குறைவு தான். பாதாம் மரப்பட்டைகளில் சேகரமாகிய பிசின் தான் பாதாம் பிசின். வெண்ணிறமாக ஒழுங்கற்ற உருவில் இருக்கும்.

பாதாம் பிசினை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், முழுவதும் கரைந்து கண்ணாடி போல நீர்மம் கிடைக்கும். இதனை நம் விருப்பப்படி உணவுகளில் கலந்து கொள்ளலாம்.

பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நூறுகிராம் நாப்பது ரூபாய். ஒவ்வொரு ஊருக்கும் விலை மாறுபடலாம்.

இருப்பினும், தரமான பாதாம் பிசின் வாங்கி பயன்படுத்துவது முழுமையான நன்மையை தரும்.

பாதாம் பிசின் பயன்கள்

தாதுக்கள் உடலுக்கு எந்தளவு வைட்டமின் சத்துகள் முக்கியமோ அதே அளவு மினரல் எனப்படும் தாதுக்களும் மிகவும் அவசியமாகும் இந்த தாதுக்கள் உடலின் எலும்புகள், தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு மகனும் முக்கியமானதாகும். தாதுக்கள் அதிகமுள்ள பாதம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர உடலின் தாது தேவை பூர்த்தியாகும் .

உடல் சூடு

நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சிலருக்கு உடல் சூடு அதிகமாகி அவதியுறுகின்றனர். அதிலும் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.

அசிடிட்டி

சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும், இரவில் நெடு நேரம் கழித்து உணவு சாப்பிடுவதாலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி எனப்படும் வயிற்றில் செரிமான அமிலங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும்.

எப்படி எடுத்துகொள்வது

ஊறவைத்த பாதாம் பிசினை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நாட்டுச்சர்க்கரை, இரண்டு டீஸ்பூன் பாதாம் பிசினை எடுத்து கலந்து குடித்தால் உடனடியாக பலம் தரும்.

பாதாம் பிசின் காய்ச்சலுக்கு பிறகான காலத்தில் உடல் இழந்த பலத்தை மீட்க உதவும். பித்தம் தொடர்பான நோய்களை போக்கும்.

ஆண்மை குறைபாடுகள்

இன்று ஆண்கள் மலட்டுத்தன்மை சந்திக்க காரணம் விந்தணுக்கள் குறைபாடு, வீரியமின்மை போன்றவை தான். இந்த விந்தணுக்கள் வீரியம் ஆண்கள் உடல் உஷ்ணம் அதிகரிப்பதாலும் உண்டாக வாய்ப்புண்டு. இறுக்கமான ஆடை, நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையி ல் பணி செய்வது போன்றவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தை குறைத்து விடுகிறது. விந்தணுக்க நீர்த்துபோகவும் இவை காரணமாகிறது.

எப்படி எடுத்துகொள்வது

இரவில் ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை கலந்து இனிப்பு நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்துவந்தால் உடல் உஷ்ணமாவது குறைந்து விந்தணுக்கள் பலப்படும். நரம்புகள் வலுப்படும். மலட்டுத்தன்மை தவிர்க்கப்படும்.

​சிறுநீர் கடுப்பு

பொதுவாக நோய்கள் தீவிரமாவதற்கு முன்பு அறிகுறிகள் தெரியும். ஆனால் சிறுநீர்க்கடுப்பு பொறுத்தவரை அறிகுறியே தீவிரமாக இருக்கும். அதிக உபாதை தரக்கூடிய நோய் என்றும் இதை சொல்லலாம். ஆண்களை காட்டிலும் பெண்களுக்குதான் அடிக்கடி இந்த பாதிப்பு உண்டாகும்.

சிறுநீர்க்கடுப்பு, நீர் சுளுக்கு போன்று சொட்டுசொட்டாக சிறுநீர் கழிவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாவது என ஏற்படும் போது பாதாம் பிசினை தொடக்கத்தில் எடுத்துகொண்டால் சிறுநீர்க்கடுப்பு ஆரம்பத்திலேயே சரி செய்யப்படும். கல்லடைப்பு போக்கும் மருந்து என்று சித்தமருத்துவத்தில் இதை அழைக்கிறார்கள்.

எப்படி எடுத்துகொள்வது

பாதாம் பிசினை ஊறவைத்து எடுக்கவும். பசும்பாலை மோராக்கி கொழுப்பு நீக்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசின் சேர்த்து உப்பு சேர்த்து குடிக்கவும். காலை, நண்பகல் என இரண்டு வேளை குடித்து வந்தால் இரண்டே நாளில் சிறுநீர்க்கடுப்பு குறையக்கூடும்.

வெள்ளைப்படுதல்

பெண்களுக்கு வெள்ளைப்படுவது இயல்பானது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது வெள்ளைப்படுதலும் அதிகரிக்க கூடும். துர்நாற்றமில்லாத, வெள்ளைப்படுதல் இருக்கும் போது பாதாம் பிசினை எடுத்துகொண்டால் வெள்ளைப்படுதல் குணமாகும். கர்ப்பப்பை உஷ்ணத்தையும் தவிர்க்க உதவுகிறது. கர்ப்பப்பையில் புண் இருந்தாலும் அதை படிப்படியாக குணப்படுத்தி விடும் குணம் பாதாம் பிசினுக்கு உண்டு.

எப்படி எடுத்துகொள்வது

ஊறவைத்த பாதாம்பிசின் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட வேண்டும். காலை, மாலை. இரவு என மூன்று வேளையும் மூன்று நாள் வீதம் எடுத்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

புண்கள்

வெட்டு காயங்கள், மற்றும் தீயினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு சற்று நாளாகும். இக்காயங்களை குணப்படுத்த நவீன மருந்துகளை பயன்படுத்தினாலும் அவ்வப்போது தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.

பேதி

அதிக வெப்பமிகுந்த கோடைகாலங்கல், கோடைகாலம் முடிந்து பருவ மழை தொடங்கும் மாதங்கள் போன்ற பருவ மாற்றக்காலங்களிலும், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர் பேதி சிலருக்கும் உண்டாகிறது. இந்த சமயத்தில் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசினை சிறிதளவு உட்கொண்டு வருவதால் தொடர்ந்து ஏற்படும் பேதி நிற்கும்.

எடையை குறைக்கும் பாதாம்  பிசின்

உங்களுக்கு எடை அதிகமாகி விட்டது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இதற்கு  தீர்வுகளில் 1 பாதம் பிசின் இந்த பாதாம் பிசினை இரு வகைகளாக பிரிக்கலாம். கொழுப்பு நீக்கப்பட்ட  பாதாம் பிசின்கொழுப்பு நீக்கப்படாத  பாதாம் பிசின்  இந்தக் கொழுப்பு நீக்கப்பட்ட பாதாம் பிசினை பாலில் கலந்து உண்டு வந்தால் எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்

குறிப்பு

நாட்டு மருந்து கடைகளில் பாதாம் பிசின் கிடைக்கும். இதை தேவையான போது ஊறவைத்து சாப்பிடலாம். ஊறவைப்பதற்கு முன்பு சுத்தமான நீரில் கழுவி ஊறவைக்க வேண்டும். தண்ணீரி, பாலில், பழச்சாறுகளில் ( குறிப்பிட்டவற்றில்) மோரில், லஸ்ஸிபானங்களிலும் கலந்து சாப்பிடலாம்.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் இருந்தால்தொடர்ந்து ஒரு வாரம் வரை சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். பக்கவிளைவற்ற பாதுகாப்பான பொருள்.


Share Tweet Send
0 Comments
Loading...