பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது, சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது, சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது, சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் தனக்கு பாலியல் சொந்தரவு அளித்தாக டெல்டா மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் புகார் விஸ்வரூமெடுத்துள்ளது.

இந்தப் புகார் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டியை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜேஷ் தாஸ் சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்.  

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வழக்கு விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டிஜிபி ராஜேஷ் மீது நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை அத்துமீறி மறித்த புகாரில் சிக்கியுள்ள எஸ்.பி. கண்ணனிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...