பாகற்காய் நன்மைகள்

பாகற்காய் நன்மைகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மறுக்கும் ஓரு காய்கறி உண்டென்றால் அது பாகற்காய் தான். ஏனெனில பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. பாகற்காய் தருகின்ற சத்துகளை பற்றி தெரிந்து கொண்டால் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டோம்.

பாகற்காயில் பல வகைகள் உண்டு. அனால் இரண்டு வகை பாகற்காய்களையே உற்பத்தி செய்கின்றனர். ஒன்று குட்டையானது மற்றொன்று நீளமானது. குடையானது மிதி / குருவித்தலை பாகற்காய் என்றும், நீளமானது கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கபடுகிறது. பாகற்காயானது பாகல் என்றும் பாவக்காய்  என்றும் அழைக்கபடுகிறது.

‌                                   ‌பாகற்காயில் பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இருக்கிறது. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். அதே போல வாழைப்பழத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் அத்தியாவசியமாகும்.‌‌

புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் பாகற்காயில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது.  இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது.‌‌

வைட்டமின் கலவை

இது கலோரி குறைவான ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

குடற்புழுவுக்கு மருந்து

‌‌இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

விதைகளிலும் உண்டு பயன்கள்!‌‌

இதன் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு  உண்டு.

தோல் நோய்களுக்கு மருந்து!

இதன் சாற்றை எலுமிச்சைச் சாற்றில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்னை நீங்கும். தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு தரும்.

முடியைப் பாதுகாக்கும்!

‌‌இதன் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும். இதன் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.

எடை குறைப்புக்கு உதவும்!

‌‌பாகற்காயில் 80- 85% தண்ணீர் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் கலோரியும் குறைவுதான். தண்ணீர் நமது பசியைக் போக்கும் என்பது நமக்குத் தெரியும். பாகற்காயைச் சாப்பிடுவதால் பசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனால் எடை குறையும்.

சுவாசப் பிரச்னைகளை நீக்கும்!

‌‌துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக்கி அரைத்து தேனில் கலந்து தினமும் காலையில் சாப்பிடவேண்டும். இது ஆஸ்துமா, சளி, இருமலுக்கு நல்ல தீர்வாக அமையும்.

கல்லீரலுக்கு நல்லது!

பாகற்காய் அல்லது பாகற்காய் இலையைப் போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால், அது தொற்றுகளைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.

‌‌மலச்சிக்கலுக்கு மருந்து!‌‌

இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.  இதனால் மலச்சிக்கல் , அஜீரணம் போன்றவற்றை நீக்கும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு கட்டும்.

ஓர் எச்சரிக்கை!‌‌

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பாகற்காயைப் பொறுத்தவரை உண்மை.  தினமும் பாகற்காயைக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாகற்காயைத் தவிர்ப்பது நல்லது

பயன்கள்

1. பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது.‌‌

2. கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

3. பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும்.

4. பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

5. பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

6. பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

7. பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.

8. பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.

9. பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்,  இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...