தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.11.2020 (Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.11.2020 (Current Affairs)
உலகம்
 • தாய்லாந்தில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று அந்த நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்திப் போராடி வரும் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 • எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத்தில் தாக்குதல் நடத்தி வரும் ராணுவம், தலைநகர் மேகேலிக்கு அருகிலுள்ள பல ஊர்களைக் கைப்பற்றி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா
 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளைச் சேர்ந்த அரசின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா கடந்த 2017-ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக இணைந்தது. அதற்குப் பிறகு அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த அரசின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா முதல் முறையாகத் தலைமையேற்று நடத்துகிறது.
 • கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா-இலங்கை-மாலத்தீவுகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டமானது 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இதற்கு முன் தில்லியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
தமிழகம்
 • தமிழகத்தில் வரும் டிச. 15-ஆம் தேதிக்குள் 2,000 சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்குகள்) தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
வர்த்தகம்
 • தங்க ஆபரணங்கள் தேவை, நடப்பு நிதியாண்டில், 35 சதவீதம் குறையும் என, தர நிர்ணய நிறுவனமான, 'இக்ரா' தெரிவித்துள்ளது.
 • பார்தி ஏ.எக்ஸ்.ஏ., ஜெனரல் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு நிறுவனத்துடன் இணைவதற்கு, அனுமதியை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வழங்கி உள்ளது.
 • உணவு சாராத பிரிவுகளுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்தாண்டு அக்டோபரில் 8.3 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் அக்கடனின் வளர்ச்சி 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.
 • நடப்பு நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.9,53,154 கோடியாக அதிகரித்துள்ளது. இது, நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் 119.7 சதவீதமாகும்.
 • நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,529 கோடி டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
 • நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,000 கோடி டாலரை (சுமார் ரூ.2.25 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

Share Tweet Send
0 Comments
Loading...