அருமருந்தான அற்புத பயன்கள் கொண்ட நொச்சி

அருமருந்தான அற்புத பயன்கள் கொண்ட நொச்சி

புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம். ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்க்கும்; வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காக்கும். நீர்ச் செழிப்புள்ள இடங்களில் வளரக்கூடிய நொச்சி காற்றைத் தடுக்கும் தன்மை படைத்தது. வீடுகளின் முகப்பில் நடுவதால் தூசியை வடிகட்டுவதோடு கொசுக்களை விரட்டும் தன்மையும் படைத்தது.

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக மருத்துவத்திற்காக பயன்படுத்திவந்த இலைதான் இந்த நொச்சி இலை. ஆனால் காலப்போக்கில் இதன் மகத்துவம் மறைந்து கொண்டே தான் போகிறது. இந்த நொச்சி இலையின் பயன்கள் ஏராளம். இந்த நொச்சி இலையை நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, நம் முன்னோர்கள் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைப் பற்றி சற்று விரிவாக காண்போமா.

மூட்டுவலிக்கு மருந்து


முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது

வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

கல்லீரல் நோய்களுக்கு மருந்து

மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

காய்ச்சலின் போது

நொச்சி இலையில் ஆவி பிடித்து வருவதன் மூலம் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். நொச்சி இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாக காயவைத்து அந்த நீரில் குளித்து வர காய்ச்சலின் போது ஏற்பட்ட உடல் வலி நீங்கும்.

ஆஸ்துமா பிரச்சினைக்கு

மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.

​தலையணையில் நொச்சி

நொச்சி இலையை துணியில் அடைத்து அதை தலையணையாக பயன்படுத்தினால் தூக்கம் நன்றாக வரும். சைனஸ் இருப்பவர்கள் தினசரி இந்த தலையணை பயன்படுத்தினாலே பலன் கிடைக்கும். கழுத்துவலி, கழுட்தில் நெறிகட்டுதல், நரம்பு கோளாறுகளால் கழுத்துவலி என அவதிப்படுபவர்களுக்கு இந்த தலையணை மருத்துவம் கைகொடுக்கும்.

தலைவலி

நொச்சி இலையுடன் சிறிதளவு சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்து அந்தப் பற்றினை நெற்றி, கண்ணம், காதின் பின்பகுதி இவைகளில் தடவி வந்தால் தலைவலி குணமாகும். வீக்கம் நீங்க

உடல்வலி

உடலில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நொச்சி இலையை வாணலியில் போட்டு வதக்கி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் எங்கெல்லாம் வலி வீக்கம் இருக்கிறதோ அங்கு ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கழுத்து வலி நீங்க

நொச்சி இலைச் சாற்றுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து கை பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து குளித்தால் கழுத்து வலி, கழுத்தில் நெறி கட்டுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். நரம்பு பிரச்சனையால் சில பேருக்கு கழுத்து வலி இருந்து வரும். அந்த பிரச்சினைக்கும் இது தீர்வாக இருக்கும்.

சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு

உடலில் இருக்கும் கப நோய்களை விரட்டி அடிக்க நொச்சி இலை பயன்படுத்தப்படுகிறது. ஜலதோஷம், மூக்கடைப்பு முக்கியமாக சைனஸ் தலைவலிக்கு விரைவாக தீர்வளிக்கிறது நொச்சி இலை.

சைனஸ் தலைவலி இருப்பவர்க்கள் நொச்சி இலையுடன் சிறிது அளவு சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எதுவுமே இல்லையென்றாலும் நொச்சி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி நல்ல சூடு பதம் இருக்கும் போதே துணியில் முடிந்து அதைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் வலி உபாதை கப நோயான இரைப்பு நோ இருப்பவர்கள் நொச்சி இலையுடன் மிளகு பூண்டு, இலவங்கம் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலோ அல்லது கஷாயமாக்கி குடித்தாலே இரைப்பு நோய் தீவிரமாகாமல் குறையும். நொச்சி இலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவந்தால் பீனிச நோய்கள், ஒற்றைத்தலைவலி சேர்ந்து குறையும்.

கொசு விரட்டி

நொச்சி இலைகளை தீ மூட்டி அதில் வரும் புகையினால் கொசுக்கள் விரட்டபடுகிறது. எந்தப் பக்கவிளைவும் இல்லாத கொசு விரட்டியாக இது நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. நொச்சி இலைகளை படுக்கும் இடத்தில் ஒரு தட்டில் போட்டு வைத்திருந்தாலே கொசுக்கள் உள்ளே வராது. வீட்டைச் சுற்றி இடம் உள்ளவர்கள் நொச்சி செடியை வளர்த்து வந்தால் பூச்சி பொட்டுகள் அண்டாமல் இருக்கும். நம் வீட்டு வாசலில் நொச்சிச் செடிகள் இருந்தால் நம் வீட்டிற்குள் வரும் தூசியினை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

தானியங்களை பாதுகாக்க

நம் வீட்டில் தானிய வகைகள், பருப்பு வகைகள், அரிசி இவைகளை சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் இந்த நொச்சி இலைகளை போட்டு வைத்தால் புழு, வண்டு இவைகள் வராமல் இருக்கும். இவைகள் மட்டுமல்லாமல் இந்த நொச்சிசெடி நம் ஊர்களில் இருக்கும் ஏரிகளின் கரையோரத்தில் வளர்த்து வந்தால், கரையானது உடையாமல் வலுவாக இருக்கும். மலைச்சரிவுகளில் தானாக வளரும் இந்த நொச்சிசெடி மண் அரிப்பைத் தடுக்கிறது. அதிவேகமாக வீசப்படும் காற்றை தடுக்கும் சக்தியும் இந்த நொச்சிச் செடிக்கு உண்டு.


Share Tweet Send
0 Comments
Loading...