நிகோலா டெஸ்லா - வாழ்க்கை வரலாறு

நிகோலா டெஸ்லா -  வாழ்க்கை வரலாறு

Nikola Tesla Life History

நிகோலா டெஸ்லா என்பவர் ஒரு விஞ்ஞானி ஆவர். டெஸ்லா சுருள்(TESLA COIL), மாற்று மின்னோட்ட மின்சாரம்(ALTERNATING-CURRENT [AC] ELECTRICITY) மற்றும் சுழலும் காந்தபுலம்(ROTATING MAGNETIC FIELD) ஆகியவை அவருடைய முக்கியமான கண்டுப்புடிப்புகள் ஆகும்.

                                பிறப்பு: ஜூலை 10, 1856
                               பிறந்த இடம்:  குரோவேஷியா, ஸ்மில்ஜனில்
                               பெற்றோர்: மிலுடின் டெஸ்லா, ஜுகா மாண்டிக்
                               இறப்பு:  ஜனவரி 7, 1943

ஆரம்ப வாழ்க்கை :

டெஸ்லா ஜூலை 10, 1856 அன்று குரோவேஷியா நாட்டில் உள்ள ஸ்மில்ஜனில் பிறந்தார். டெஸ்லா உடன் பிறந்தவர்கள் டேன், ஏஞ்சலினா, மில்கா மற்றும் மரிகா என டெஸ்லாவையும் சேர்த்து ஐந்து குழந்தைகள் ஆவர்.

மின்சார கண்டுபிடிப்புகளில் டெஸ்லாவை தூண்டியது அவர் தாயார் ஜுகா மாண்டிக் ஆவர். டெஸ்லா வளர்ந்து வரும் காலங்களில் சிறிய வீட்டு உபயோக பொருட்களை கண்டுபிடித்தார். டெஸ்லாவின் தந்தை மிலுடின் டெஸ்லா ஆவர். இவர் செர்பிய மரபுவழி பாதிரியார் மற்றும் எழுத்தாளர் ஆவர்.

சிறிய வயதில் இருந்தே டெஸ்லாவின் தந்தை டெஸ்லாவையும் ஒரு பாதிரியாராக ஆக்க வேண்டும் என்று எண்ணி அவரை கட்டாயபடுத்தினர் ஆனால் டெஸ்லா அதற்க்கு செவி சாய்க்கவில்லை ஏன் என்றால் அவருக்கு அறிவியல் மீது அதீத ஆர்வம் இருந்தது.

கல்வி :

டெஸ்லா கிராஸில்(Graz) உள்ள ஆஸ்திரிய பாலிடெக்னிக் நிறுவனத்தில் மின் பொறியியல் பயின்றார், பின்னர் ப்ராக் நகரில் உள்ள சார்லஸ்-ஃபெர்டினாண்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். துரதிர்ஷ்டவசமாக டெஸ்லாவின் தந்தை சீக்கிரம் இறந்துவிட்டார், இதன் காரணமாக ஒரே ஒரு செமெஸ்டரை முடித்திருந்த டெஸ்லா பல்கலைக்கழகத்தை விட்டுப்பாதியிலேயே வெளியேற வேண்டியிருந்தது.

டெஸ்லா 1880 ஆம் ஆண்டில் புடாபெஸ்ட் டேலகிராப் நிறுவனத்தில் டிவாடர் புஸ்கஸின் கீழ் ஒரு வேலைவாய்ப்பு வர அதை ஏற்றுக்கொண்டார். சிறிது காலத்தில் அவர் அதே நிறுவனத்தில் தலைமை எலக்ட்ரீஷியனாகவும் பின்னர் நிறுவனத்தின் பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் அவர் கான்டினென்டல் எடிசன் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்ற பாரிஸுக்கு சென்றார்.

டெஸ்லா புடாபெஸ்டில் இருந்தபோதுதான் இன்டக்ஷன் மோட்டருக்கான யோசனை முதலில் டெஸ்லாவுக்கு வந்தது, ஆனால் அவரது கண்டுபிடிப்பில் ஆர்வம் பெற பல ஆண்டுகள் முயற்சித்தபின்,தன்னுடைய 28 வயதில் டெஸ்லா ஐரோப்பாவை விட்டு அமெரிக்காவுக்கு செல்ல முடிவு செய்தார்.

நிகோலா டெஸ்லா மற்றும் தாமஸ் எடிசன் இடையேயான உரசல்

டெஸ்லா அவர்கள் 1884ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனை சந்திப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றார். அந்த காலகட்டத்தில் தாமஸ் எடிசனின் DC அடிப்படையிலான மின் பணிகள் நாட்டில் விரைவாக அமலாகி கொண்டிருந்தது.

எடிசன் டெஸ்லாவை வேலைக்கு அமர்த்தினார், மேலும் இருவருமே விரைவில் ஒருவருக்கொருவர் அயராது உழைத்து, எடிசனின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினர். பல மாதங்களுக்குப் பிறகு, முரண்பாடான வணிக-விஞ்ஞான உறவின் காரணமாக டெஸ்லா மற்றும் தாமஸ் எடிசன் இருவரும் பிரிந்தனர் .

பிறகு டெஸ்லா 1885 இல் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸுடன் பணிபுரியத் தொடங்கினார். டெஸ்லா அங்கு அவர் மாற்று மின்னோட்டத்தை விநியோகிக்கும் முறையை வகுத்தார்.

டெஸ்லாவின் மாற்று மின்னோட்டம் :

மின்சக்தி வரலாற்றில் முக்கியமானது டெஸ்லா கண்டுபிடித்த மாற்று மின்னோட்டத்தை (AC) உபயோகிப்பது ஆகும்.

தாமஸ் எடிசனின் நேரடி மின்னோட்ட (DC) முறையுடன் ஒப்பிடும்பொழுது டெஸ்லாவின் மாற்று மின்னோட்ட முறை ஒரு திறமையான மற்றும் பயனுள்ள முறையாக நிருபிக்கப்பட்டது.

நவீன மின்சார விநியோக முறையில் டெஸ்லாவின் மாற்று மின்னோட்ட முறை அடிப்படையாக அமைந்தது. இந்த மின்னோட்ட முறை தற்காலத்திலும் உலக அளவில் தரமாக இருந்து வருகிறது.

டெஸ்லா மோட்டார்ஸ் :

அமெரிக்காவில் பொறியிலாளர்கள் பலர் ஒன்று இணைந்து, வரகூடிய காலங்களில் மின்சார கார்களை இணைந்து உருவாக்கும் ஒரு நிறுவனத்தை 2003ஆம் ஆண்டு உருவாக்கினர் . அப்போது தொழில் முனைவோர் மற்றும் பொறியியலாளர் எலான் மஸ்க் அந்த நிறுவனத்திற்காக 30 மில்லியன் அமெரிக்க டாலர் என அனைவரை விட மிக அதிகமான முதலீட்டை செய்தார்.

அந்நிறுவனத்திற்கு டெஸ்லா என பெயர் வைக்க பட்டது. தற்போது எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர்(CO-FOUNDER) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) பணியாற்றி வருகிறார்.

எண்ணங்களை பிரதியெடுக்கும் கேமரா (Thought Camera)

“இது ஏன் சாத்தியமில்லை?” இது தான் டெஸ்லா அன்றாட கேட்கும் கேள்வி! அதன் விளைவாக உதித்த ஒரு யோசனை தான் இந்த Thought Camera. ஒரு முறை டெஸ்லா இவ்வாறு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கிறார். “நாம் ஒரு எண்ண ஓட்டத்தில் இருக்கும்போது, அது காட்சியாக நம் கண்முன்னே கற்பனையில் விற்கிறது. நிச்சயம் அது நம் விழித்திரையில் பிரதிபலிக்காமல் இருக்காது. அப்படி பிரதிபலிப்பதை சரியான கருவிகள் கொண்டு நாம் பிரதியெடுத்து திரையில் காண்பிக்கமுடியும் என்று நான் பலமாக நம்புகிறேன்!” என்றார். இது ஒருவேளை நடந்திருந்தால், இந்நேரம் அனைவரின் மனங்களையும் நாம் படித்துக் கொண்டிருப்போம்!

வயர்லெஸ் எனர்ஜி (Wireless Energy)

1901ஆம் வருடம், பிரபல நிதியாளாரான ஜே.பி.மார்கன் டெஸ்லாவிற்கு $150,000 கொடுத்து 185 அடி உயரத்தில் ஒரு டவர் ஒன்றை நிறுவாமாறு கேட்டுக்கொள்கிறார். இதன் மூலம் நியூயார்க் நகரத்தில் இருந்துக்கொண்டே தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்ப முடியும்.

Wardenclyffe Tower என்றழைக்கப்பட்ட அந்த டவரின் வேலை பாதி முடிந்தத் தருவாயில், டெஸ்லாவிற்கு தோன்றுகிறது அந்த யோசனை! வெறும் காற்றை மட்டும் கொண்டே மின்சாரத்தைக் கடத்தினால் என்ன? இந்த டவரை அடித்தளமாக வைத்து இந்த திட்டத்தை தொடங்கினால், மொத்த நியூயார்க் நகரத்திற்கும் சுலபமாக மின்சாரம் கொடுத்துவிட முடியுமே?

ஆனால் மார்கன் அவர்களுக்கு எங்கே இது சாத்தியமானால் மின்சாரத் துறையில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிடிவாதமாக கூடுதல் பணம் ஒதுக்க மறுத்துவிட்டார். அந்த திட்டம் கைவிடப்பட்டது.

செயற்கை கடல் அலைகள் (Artificial Tidal Waves)

அறிவியலைக் கொண்டு போர்களில் பல ஜாலங்கள் நிகழ்த்தி சுலபமாக வெற்றிப் பெற முடியும் என்று உறுதியாக நம்பினார் டெஸ்லா.

1907ஆம் வருடம் நியூயார்க் வேர்ல்ட் என்ற நாளேட்டில் இப்படி ஒரு செய்தி வந்தது. டெஸ்லாவின் இராணுவ கண்டுபிடிப்புகளில் ஒன்றாக வரவிருக்கிறது 'செயற்கை கடல் அலைகள்'. கடலுக்கடியில் வெடிக்கக்கூடிய வெடிப்பொருள்களை பதுக்கிவைத்து விட்டால், எதிரிகள் நம்மை சூழும்போது வெறும் தந்தி மூலம் அந்த வெடிகளை வெடிக்கச் செய்ய முடியும்.

இதன் மூலம் கடலில் பெரிய அளவில் செயற்கை அலைகளை உருவாக்கி எதிரிகளின் மொத்தக் கடற்படையையும் மூழ்கடிக்க முடியும். இப்படி சொல்லிவிட்டு அந்த செய்தித்தாளே அதற்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கியது. “இதை சாத்தியப்படுத்தினால், நம் கடற்படைக்கே வேலையில்லாமல் போய்விடும். இது உலக அமைதிக்கு எதிரான விஷயமும் கூட!” என்று எச்சரித்தது. அந்த முயற்சி அதோடு கைவிடப்பட்டது.

மின்சாரம் கொண்டு இயங்கும் சூப்பர்சோனிக் ஏர்ஷிப் (Electric-Powered Supersonic Airship)

சிறுவயது முதலே டெஸ்லாவிற்கு பறப்பது என்ற அறிவியல் விந்தையில் நாட்டம் அதிகம். மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்கில் சிறந்து விளங்கிய டெஸ்லா, Reconstruction என்ற ஒரு பத்திரிக்கையில் தான் இப்போது செய்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார்.

அதில் வெறும் மின்சாரம் மட்டும் கொண்டு இயங்கும் அதிவேக விமானம் சாத்தியமென்றும், அதன்மூலம் மக்கள் போக்குவரத்தையும் நிகழ்த்தமுடியும் என்று கூறினார். நிலத்தில் இருந்து வெறும் 8 மைல்கள் உயரத்தில் பறக்கக் கூடிய இதில், நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகரத்திற்கு வெறும் 3 மணி நேரங்களில் சென்று விட முடியும் என்று ஆச்சர்யப்படுத்தினார்.

இதன் மூலம் எரிவாயுவின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் அந்த முயற்சியும் பின்னாளில் கைவிடப்பட்டது.

அவரது கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் திருடுவதைக் குறித்து கேட்டபோது, “அவர்கள் என் கண்டுபிடிப்புகளை திருடுவது எனக்கு கவலை அளிக்கவில்லை. சொந்தமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு திறன் இல்லை என்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது!” என்றார்.

மற்ற கண்டுபிடிப்புகள் :

1891ஆம் ஆண்டு மின்சக்தி மின்னணு சாதனங்களுக்கான முதல் வெற்றிகரமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்.

1895 ஆம் ஆண்டில், டெஸ்லா நயாகரா நீர்வீழ்ச்சியில் அமெரிக்காவின் முதல் ஏசி(AC) நீர் மின் நிலையம் ஒன்றை வடிவமைத்தார்.

அதற்க்கு பின்பு வந்த ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பப்பெல்லோ(BUFFALO) நகரத்திற்கு டெஸ்லாவின் நீர் மின் நிலையத்தில் இருந்து மின்சக்தி கொடுக்கபட்டது. இந்த விஷயம் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது. இதன் காரணமாக டெஸ்லாவின் மாற்று மின் முறை உலகம் முழுவதும் பயன்படுத்த தொடக்கபுள்ளியாக அமைந்தது. அது மற்றும் இன்றி டெஸ்லா ஜெனரேடர்கள்,டர்பைன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவினார்.

டெஸ்லா தான் கண்டுபுடித்த சுருளை(COIL) வைத்து எக்ஸ்ரே,ரேடியோ,வயர்லெஸ் சக்தி ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய மற்றும் படிப்பதற்கு பயன்படுத்தினார். இன்றுள்ள வயர்லெஸ் மூலமாக பயன்படுத்தபடும் அனைத்து மின்னணு பொருட்களும் டெஸ்லாவின் ஆரம்பம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சுவாமி விவேகானந்தரும் நிகோலா டெஸ்லாவும்

வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறிய அப்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகளில் நிகோலா டெஸ்லாவும் ஒருவர். நிகோலா டெஸ்லா உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டவர்.

1896 பிப்ரவரி 5-இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார்.

அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞ‍ர்கள் நம்பியிருந்தார்கள்.

ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே; ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார்.

மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது.

எக்ஸ் ரே

‌‌‌‌எக்ஸ் ரேவை முதலில் வில்ஹெலம் ரோன்ட்கென் என்பவர் கண்டுபிடித்திருந்தாலும் அதில் அதிநவீனத்தை புகுத்தியவர் டெஸ்லா தான். அவர் தனது நண்பரை அதன் மூலம் புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட விபத்து தான் இதை கண்டுபிடிக்க வைத்துள்ளது. தற்போது டெஸ்லா கண்டுபிடித்த முறை படிதான் இன்றளவும் உலகளவில் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகிறது.‌‌‌‌

ரேடியோ‌‌‌‌

ரேடியோவை கண்டுபிடித்தது மார்க்கோனி என நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் 1892ம் ஆண்டே ரேடியாவிற்கான மாடலை கண்டுபிடித்தனர் டெஸ்லா, ஆனால் அதற்கான காப்புரிமையை அவருக்கு வழங்க அப்போதைய அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. அதன்பின் 1901ம் ஆண்டு மார்க்கோணி ரோடியவை விடிவமைத்து அதற்கான காப்புரிமையை பெற்றார்.

ரிமோட் கண்ட்ரோல்‌‌‌‌

இன்று நாம் வீட்டில் இருந்த இடத்தில் இருந்த ரிமோட் மூலம் வீட்டில் டிவியில் சேனலை மாற்றுகிறோம். ஏசியில் அளவுகளை மாற்றுகிறோம். இந்த வயர்லெஸ் மூலம் செயல்படும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டத்தை கண்டுபிடித்தவர் டெஸ்லா தான்.

‌‌‌‌நியான் லைட்ஸ்‌‌‌‌

டெஸ்லா நேரடியாக நியான் லைட்களை கண்டுபிடிக்காவிட்டாலும், அவர் கேத்தோடு கதிர்களில் இருந்து 4 விதமான லைட்களை வெளிப்படுத்தலாம் என்ற கோட்பாட்டை எழுதியிருந்தார். அதை மூலமாக கொண்டே நியான் லைட்ஸ் தயாரிக்கப்பட்டது.‌‌‌‌

ரோபோக்கள்‌‌‌‌ நிக்கோலா டெஸ்லா ரோபோக்களை முதலில் கண்டுபிடிக்காவிட்டாலும், கடந்த 1898ம் ஆண்டு இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெகு தொலைவில் இருந்து கப்பல் மற்றும் படகுகளை இயக்குவது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதன் மேம்படுத்தப்பட்ட விடிவத்தை தான் நாம் இன்று ரோபோக்களில் பயன்படுத்துகிறோம்.

வயர்லெஸ் டெக்னாலஜி‌‌‌‌

டெஸ்லாவில் இந்த உலகை வயர்லெஸ் மூலம் இணைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் 185 அடி உயரத்தில் ஒரு டவர் கட்டி அதன் மூலம் உலகில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் தொலை தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அதை கட்டமைக்க பணம் இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை.

நோபல் பரிசும் தெஸ்லாவும்

மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர்.

இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு 1912-ம் ஆண்டு, இவருடைய உயர் மின்னழுத்த உயர் அதிர்வெண் ஒத்ததிர்வு மின்மாற்றிகள் பயன்படுத்தி வடிவமைப்பு சுற்றுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக புரளி வெளியானது.

இறப்பு :

நிகோலா டெஸ்லா அவர்கள் ஜனவரி 7, 1943 இல் நியூயார்க் நகரில் இதய நோயால் இறந்தார். அப்போது அவருக்கு 86 வயது.

‌‌


Share Tweet Send
0 Comments
Loading...