நாளந்தா பல்கலைக்கழகம்

நாளந்தா பல்கலைக்கழகம்

உலகியே மிகத் தொன்மையானதும் மிகப்பெரியதுமான  நாளந்தா பல்கலைக்கழகம் அபூர்வ மருத்துவ கல்வியால்  அழிந்து போன நாளந்தா பல்கலைக்கழகம்

ஐந்தாம் நூற்றாண்டில்

மகத நாட்டு (தற்போதைய பீகார்) மன்னனான மகேந்திராதித்யா எனப்படும் முதலாம் குமார குப்தரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் தொல்லியல் துறை. நாளந்தா பல்கலைக்கழகம் கி.மு 1200லேயே நிறுவப்பட்டிருக்கலாம் என்கிறது.

நாளந்தா பல்கலைக்கழகம் 30  ஏக்கரில்  அமைந்த எட்டு வளாகத்துடன் கூடிய கட்டமைப்பை கொண்டது. பல அடுக்குகளைக் கொண்ட மூன்று கட்டடங்களை உடையது. முக்கியமான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்த ஒரு கட்டடம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஏரி, பூங்காக்கள், மற்றும் 6 கோவில்கள் இருந்தன.ஒரே சமயத்தில் 10,000 மாணவர்கள் அங்கு தங்கி படித்தனர்.  அவர்களுக்கு 2000 ஆரியர்கள் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் தங்குவதற்கு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கும் விடுதிகள் இருந்தன.பௌத்த மத கல்வியும் அங்கு பயிற்றுவிக்கப்பட்டதால், பல புத்த பிக்குகள் அங்கு படித்தனர்.அவர்கள் தங்க பிரத்யேக இருப்பிடங்களும், தியான மண்டபங்களும் அங்கு இருந்தன.

ஒன்பது நூலகங்களும் அதில் 90 லட்சம் அபூர்வமான புத்தகங்களும் இருந்தன.

தத்துவம், வானவியல், கணிதம், உடற்கூறியல்(anatomy), வேதம், சமஸ்கிருதம், மருத்துவம்,  சம்கியா(Samkhya) யோகா, பௌத்தம் மற்றும் பலவகையான துறைகளில் அங்கு கல்வி அளிக்கப்பட்டது.

திபெத், சீனா, கிரீஸ், பெர்சியா, கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்வி பயில வந்தனர்.

யுவான் சுவாங் மற்றும் ஈஜிங் ஆகிய சீனர்கள் இங்கு பயின்றவர்களே.

♥️ இப்படிப்பட்ட பெருமையுடைய பல்கலைக்கழகம், அது கொடுத்த அபூர்வ மருத்துவ கல்வியாலேயே அழிந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்

💥முகமது பக்கியர் கில்ஜி என்பவன் ஒரு துருக்கி படைத் தளபதி. ஒரு முறை அவன் கடுமையாக நோயுற்றான். அப்போது பல பெரிய மருத்துவர்களாலும் அவனை குணப்படுத்த முடியாமல் போகவே, சிலர் அவனிடம் ஆச்சார்யா ராகுல் ஸ்ரீபத்ரா என்பவரைப் பற்றி கூறினர்.

💜 ஆச்சார்யா நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் தலைவர் ஆவார். எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தக் கூடியவர்.

💙ஆனால் ஆணவம் பிடித்த கில்ஜி தன் நாட்டு மருத்துவர்களை விட வேற்று நாட்டு மருத்துவர் ஒருவர் சிறந்தவராக இருக்க முடியாது என்று கொக்கரித்தான். ஆச்சார்யாவிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தான்.

♥️இருப்பினும் நாளுக்கு நாள் அவனுடைய உடல் மோசமானதால் வேறு வழியில்லாமல் ஆச்சார்யா வரவழைக்கப்பட்டார்.

💜ஆனால் கொழுப்பெடுத்த கில்ஜி, ஆச்சார்யாவிடம் "நீ தரும் மருந்தை நான் சாப்பிட மாட்டேன். எனவே மருந்து கொடுக்காமல் என்னை குணப்படுத்த முடியுமா?" என்று கேட்டார். அதற்கு ஆச்சார்யா ஒப்புக் கொண்டு மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு சென்றார்.

💙 மறுநாள் ஒரு குரான் புத்தகத்தை ஆச்சார்யா கொண்டு வந்தார். அதைக் கில்ஜியிடம் கொடுத்து அதில் குறிப்பிட்ட சில பக்கங்களை தினமும் படிக்கச் சொன்னார். அவ்வாறே கில்ஜி படித்து வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் குணமடைய ஆரம்பித்தான்.

♥️ஆச்சார்யமடைந்த கில்ஜி இது எப்படி சாத்தியமானது என்று ஆச்சார்யாவிடம் வினவ, அந்த புத்தகத்தின் பக்கங்களில் தான் சக்தி மிக்க மருந்து பூச்சு செய்திருந்ததாகவும், படிக்கும் போது தொடர்ந்து அவன் அந்த மருந்தை சுவாசித்ததால் உடல் நலம் பெற்றான் என்றும் கூறினான்.

💜அதைக் கேட்ட கில்ஜிக்கு பொறாமை கொப்பளித்தது. ஆச்சார்யாவுக்கு இவ்வளவு அறிவும் திறமையும் எப்படி வந்தது என்று உடனிருந்தவர்களிடம் வினவினான்.

💙அவர்கள் அனைவரும் சுட்டிக் காட்டியது நாளந்தா பல்கலைக்கழகத்தை. நாளந்தா பல்கலைக்கழகமும் அங்கே குவிந்திருக்கும் 90 லட்சம் புத்தகங்களுமே அங்கு படிப்பவர்களுக்கு அறிவாற்றலை அள்ளி வழங்குகிறது என்பதைக் கேள்வி பட்ட கில்ஜிக்கு பொறாமை தலைக்கேறியது.

♥️ஆச்சார்யா அவனுக்கு செய்த உதவியை மறந்தான். மகத நாட்டின் மீது படையெடுத்துச் சென்று நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்து நொறுக்கினான்.

💜அங்கு பயின்ற 10,000 மாணவர்கள் மற்றும் 2000 ஆசிரியர் மற்றும் புத்த பிக்குகளை கொன்று குவித்தான்

💙 அங்கிருந்த ஒன்பது  நூலகங்களையும், அதில் இருந்த 90 லட்சம் நூல்களையும் தீக்கிரையாக்கினான். 90 லட்சம் நூல்களையும் எரிக்க அவனுக்கு மூன்று மாதங்கள் ஆகின. ஆனால் ஒரு நூல் கூட தப்பித்து விடக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.


Share Tweet Send
0 Comments
Loading...