மூலிகை குளியல் பொடி(நலங்கு மாவு)

மூலிகை குளியல் பொடி(நலங்கு மாவு)

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் குளியலுக்கு பயன்படுத்திய மூலிகை பொருட்களின் கலவையே நலங்கு மாவு ஆகும்.இது கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, செண்பகப்பூ, ரோஜா இதழ்கள் மற்றும் பலவகையான மூலிகை பொருட்கள் கலந்தது.இது குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது மேலும் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் அண்டாது.

நலங்கு மாவு உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள்:

  • சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெய்பசையை நீக்குகின்றது.
  • குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
  • தோலை பளபளப்பாக்கும்.
  • சருமத்தின் அமிலத்தன்மையை நிலைப்பாட்டில் வைக்கின்றது.
  • இதில் கலந்துள்ள மஞ்சள்  முகத்திலுள்ள மாச, மரு நீக்கி தோலுக்கு ஊட்டமளிக்கும்.
  • உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
  • வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
  • வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
  • இதை தினமும் பூசி வர உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை தடுக்கும்.
  • நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
மகிழம் பூ பொடி 50 கிராம்
வெள்ளரி விதை 50 கிராம்
கோரைக்கிழங்கு 50 கிராம்
திருமஞ்சன பட்டை- 100 கிராம்
பூஞ்சாந்து பட்டை- 50 கிராம்
மலை நன்னாரி-100 கிராம்
கார்போகஅரிசி 50 கிராம்
அதிமதுரம்  50 கிராம்
அகில் கட்டை 50 கிராம்
தும்மராஷ்டம் 500 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோஷ்டம் 50 கிராம்
சந்தனத் தூள் 50 கிராம்
ஏலரிசி 200 கிராம்
திருநீற்றுபச்சிலை 50 கிராம்
உலர் நெல்லிக்காய் 20 கிராம்
உலர் ரோஜா இதழ்  50 கிராம்
உலர் செம்பருத்தி  50 கிராம்
எலுமிச்சை/ ஆரஞ்சு தோல் 20 கிராம்
செண்பக பூ/ சாமந்தி பூ/ மரிக்கொழுந்து 20 கிராம்
வெட்டிவேர் 50 கிராம்
வேப்பிலை 20 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
பூவந்திக்கொட்டை – 50 கிராம்

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆண்கள் பயன்படுத்த மஞ்சளை தவிர்க்கவும். சரும பராமரிப்பில் நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு,தினம்தோறும் குளிக்க செல்லும் போது ஒரு ஸ்பூன் குளியல் பவுடரை சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை உடம்பு முழுவதும் உள்ளங் கைகளால் நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால் போதும். பிறந்த குழந்தையில் இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. சருமம் பளபளப்பாக மாறும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

 

 


Share Tweet Send
0 Comments
Loading...