முருங்கை பிசின்

முருங்கை பிசின்

முருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும்.

முருங்கை மரம்  தரக்கூடிய அத்தனை பொருட்களும் மருத்துவ குணம் கொண்டது  மற்றும்  சுவைமிகுந்த பொருள்களாகும். முருங்கை மரம் கற்பகதரு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முருங்கை மரம் வீட்டில் இருந்தால் ,.அந்த வீட்டில்  உள்ளவர்கள் அனைத்துவிதமான சத்துக்களையும் பெறுவார்கள் என்று சொல்லலாம்.

இது தரக்கூடிய   பொருட்கள் முருங்கைக்காய், முருங்கை இலை  முருங்கை பிசின், முருங்கைப்பூ ஆகியவை சத்து மிகுந்தது .
முருங்கைப் பிசினில் சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம், வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், புரதம் போன்ற சத்துகள் இருக்கின்றன. இரும்புச்சத்தும் அபரிமிதமாக உள்ளது.

முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இதை பிரம்மவிரிட்சம்என்பர். இதன் மரக்கட்டை மென்மையாக இருக்கும். இதன் பயன் கருதி வேலிஓரங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இதன்மென்மையான ஈர்க்குகளில் கூட்டிலைகளையும் வெண்ணிற மலர்களையும் தக்கையானநீண்ட காய்களையும் சிறகுள்ள விதைகளையும் கொண்ட மரம். இந்த முருங்கையைரோமானியர்களும், கிரேக்கர்களும், எகிப்தியர்களும் பயன் படுத்தியுள்ளார்கள்.

முருங்கைப் பிசின் மருத்துவ குணங்கள்

முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும்.

முருங்கைப்பிசினைஎடுத்து பாலில் கலந்து சாப்பிட்டுவர ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.முகம் பொலிவு  பெரும்.

முருங்கைப் பிசினில் உள்ள பாலிசாக்கரைடு (Polysaccharide) மருந்துப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் நன்றாக வெளியேறவும், காய்ச்சல், பேதி, ஆஸ்துமா போன்றவற்றுக்கும் முருங்கைப் பிசின் அருமையான மருந்து.

முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர்விட்டு புதுப்பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கைப் பிசினைப் பாலுடன் கலந்து கெட்டியாக கன்னங்களில் பூசினால் விரைவில் தலைவலி தணியும். நெறிக்கட்டிகளின் மீது பூசினாலும் வீக்கம், வலி குணமாகும்.

முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி நெய்யில் வறுத்துத் தூளாக்கி இரவில் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவிட வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டிக் குடித்து வந்தால் உடல் வலுப்பெறும்.

வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைப் பிசின் தீர்வு தரும்.

பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட  டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு.

நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை  ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக  சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...