'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம் இன்று!

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம் இன்று!

🎶கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில், 1928 ஜூன் 24ம் தேதி பிறந்தவர், மனயங்க சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற எம்.எஸ்.விஸ்வநாதன். தன் 4வது வயதில் தந்தையை இழந்தவர், வறுமை காரணமாக தியேட்டரில் நொறுக்கு தீனி விற்றார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்று, மேடை கச்சேரி நிகழ்த்தினார்.இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில், இவர் ஆர்மோனியமும், டி.கே.ராமமூர்த்தி வயலினும் வாசித்தனர்.

🎶சுப்புராமனின் திடீர் மறைவால், பாதியில் நின்ற படங்களை,  இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்து கொடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து 700 படங்களுக்கு இசையமைத்தனர். இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
தமிழ்த் தாய் வாழ்த்தான, 'நீராரும் கடலுடுத்த...' பாடலுக்கு, மோகன ராகத்தில் இசை கோர்ப்பு செய்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்களுக்கும் இசைஅமைத்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2015 ஜூலை 14ல், தன் 87வது வயதில் காற்றில் கலந்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...