லிங்க முத்திரை

லிங்க முத்திரை

லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை  தந்துவிடும்.

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசத்திற்கு நிவாரணம் தரும்.

இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கஈகளும் அசுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல்  சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரையால வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன.

லிங்க முத்திரைசெய்முறை:

  1. முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  3. முதலில் இரு நாசி துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
  4. ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.
  5. பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும்.
  6. மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இருக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
  7. இந்த முத்திரையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
  8. முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
  9. படிப்படியாக 10 நிமிடங்கள் செய்யலாம்.
  10. பின்பு ஒரு மாதத்தில் 15 நிமிடங்கள் செய்யலாம்.

பலன்கள்:

  1. சுவாசப்பை  – நுரையீரல் வலுப்படும்.
  2. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
  3. உடலில் அதிக எடை குறையும்.
  4. அடிக்கடி சளி பிடிப்பது குறையும்.
  5. அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
  6. உடல் சூட்டை சமப்படுத்தும்.
  7. உடலில் உயிரோட்டமும் வெப்ப ஓட்டமும் சீராக இருக்கும்.

Share Tweet Send
0 Comments
Loading...