குங்குமப்பூவின் மருத்துவ நன்மைகள்

குங்குமப்பூவின் மருத்துவ  நன்மைகள்

குங்குமப்பூ ‘சிவப்பு தங்கம்' என்னும் பெயரில்  அழைக்கபடுகிறது. குங்குமப்பூ உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாக உள்ளது. பொலிவான சரும அழகைத் தரும்குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது.

குங்குமப்பூ (saffron in english) உலகின் மிக விலையுயர்ந்த மூலிகைப்பயிராகும். ஒருபவுண்டு குங்குமப்பூ 500 டாலர்முதல்5000 டாலர்வரை இடத்தை பொறுத்து வேறுபடுகிறது. உலகின் வருடாந்திர குங்குமப்பூ உற்பத்தி சுமார் 300 டன்என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குங்குமப்பூவை ஈரான் நாடுஅதிகமாக உற்பத்தி செய்கிறது, உலகின் மொத்த உற்பத்தியில் அந்நாட்டின் பங்கு76 சதவிகிதமாகும். குங்குமப்பூவின் மருந்தியல் செயல்பாடு மற்றும் மருத்துவ பண்புகள் பல்வேறு உடல்நலசிக்கல்களுக்கு நிவாரணம் அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நல்ல குங்குமப்பூவை எவ்வாறு கண்டறிவது

நீங்கள் வாங்கிய குங்குமப் பூசுத்தமானது என்பதைகண்டறிய குங்கமப்பூவின் ஓரிருஇதழ்களை தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அதுபோலியானது. 10 அல்லது15 நிமிடங்களில் கழித்து நிறம்மாறி நல்லமணமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ என்பதைகண்டறியலாம்.

தரமான குங்குமப்பூ

குங்குமப்பூ 80 சதவீதம் சிவப்பாகவும் 20 சதவீதம் மஞ்சளாகவும் இருக்கும். தரமற்றது எனில்20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும்.

குங்குமப்பூ கலப்படம்

விலைக்குறைவாக குங்குமப்பூ விற்கும் வியாபாரிகள் குங்குமப்பூவுடன் தேங்காய் துருவல் மற்றும் மெல்லிய நூலிற்கு சாயம்பூசிகலந்து விடுவார்கள். இதுபார்க்கும் போதுவித்தியாசம் தெரியாது. ஆனால் உண்ணும்போது வலிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.எனவே விலை குறைவாக கிடைக்கிறதே என்று தரமற்ற குங்குமப்பூவை வாங்கி பயன்படுத்தாதீர்கள்.

குங்குமப்பூ உற்பத்தி

குங்குமப்பூ ‘க்ரோகஸ் சட்டிவஸ்’ என்றுஅழைக்கப்படும் மலரிலிருந்து கிடைக்கிறது. குங்குமப்பூ க்ரோகிஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு மற்றும் சிவப்பு  சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடியானது மத்தியதரைக் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. உலகின் 94 சதவீத குங்குமப்பூ உற்பத்தி இரான்வசம்உள்ளது. இந்தியாவில், ஜம்மு& காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. அதைத்தவிர ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிளும் அதிகம் விளைகிறது. உலகளவில் ஸ்பெயின் நாட்டு குங்குமப்பூவிற்கு அதிக வரவேற்பு உள்ளது.

குங்குமப்பூ சாகுபடி

குங்குமப்பூவின் மலரிலிருக்கும் மகரந்தத்தை தான்நாம்சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். குங்குமப்பூ பெரும்பாலும் ஜனவரிமற்றும் அக்டோபர் மாதங்களில் தான்அதிகமாபூக்கிறது. இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோகுங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும். தரமானகுங்குமப்பூ தயாரிக்க அதிகநேரம் மற்றும் காலம்தேவைப்படும், அதனால் தான் இதன் விலையும் மிகவும் அதிகம். இதனால் தான் உலகத்தில் விலையுயர்ந்த மசாலாபொருளாக குங்குமப்பூ இருக்கிறது.

குங்குமப்பூ வகைகள்

குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் தான் அதிகம் விளைகிறது. பண்டையகாலம் முதலே குங்குமப்பூவிற்கு அதிகமான தேவை இருந்து வருகிறது. குங்குமப்பூவில் பலவகைகள் உள்ளது, அவற்றில் முக்கியமான வகைகள்பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல்.

குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள்

குங்குமப்பூ 90 க்கும்மேற்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில்உள்ளவைட்டமின் சிமற்றும் மங்கனீசு சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்

சரும பொலிவு கூடும்

பாலுடன் குங்குமப் பூவைசேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சருமபொலிவுகூடும். முகம்பிரகாசமடையும்.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்

குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள்உள்ளது. இதுஒருமயக்கமருந்து போல்செயல்படுகிறது. மேலும்குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மைஉள்ளது. இதுநரம்புமண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இதுஇயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.

முகம் ஜொலிக்கும்

குங்குமப்பூ தைலம்சிலசொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவிமசாஜ்போலசெய்துஅரைமணிநேரம்ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில்கழுவினால் முகத்தில் ரத்தஓட்டம்அதிகரித்து முகம்பொலிவுபெறும்.

மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்

மனஉளைச்சல், மனச்சோர்வுஉள்ளவர்கள் குங்குமப் பூவினைஎடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்றபொருள்உடலில்சுரக்கிறது. வயதுமுதிர்வினால் வரும்கண்பார்வைபாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதான் மூலம்பாதிப்பின் தீவிரம் குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூஉதவுகின்றது.

பாலுணர்ச்சியை தூண்டும்

பாலுணர்வு குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை பிரச்சினை உள்ளவர்கள் குங்குமப்பூ எந்தவித பக்கவிளைவுகளும் இன்றிஅதிகபலன்தரும். மேலும்ஆணின்இனப்பெருக்க மண்டலத்திற்கும் உதவுகிறது. இதிலுள்ள க்ரோசின் என்னும் பொருள்வழக்கமான செயல்முறையை விடஅதிகளவு சக்தியுடன் படுக்கையில் செயல்பட வைக்கக்கூடியது எனஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும்ஆண்மைக்குறைபாட்டை சரிசெய்யும்.

இதய செயல்பாடு மேம்படுகிறது

குங்குமப்பூவில் உள்ளகேமம்ஃபிரோல் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மூலக்கூறு, இதயத்தின் உந்துசக்தியை அதிகரிக்கிறது. இதுஇதயசெயல்பாட்டை மேம்படுத்துகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது

குங்குமப்பூவில் உள்ளஆன்டிஆக்சிடெண்ட்கள் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் ப்ரீராடிக்கல்ஸ்களை சமநிலைசெய்யஉதவுகிறது. இந்தபுற்றுநோய் போன்றநாட்பட்ட நோய்கள் வராமல்தடுக்கிறது.

சுவாச பிரச்சனைகள் தீரும்

குங்குமப்பூ ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் உள்ளதிசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்தநாளங்களை சீராகசெயல்பட வைக்கிறது. இதனால்காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.

ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்தது

குங்கும்ப்பூவில் ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்து காணப்படுகிறது. க்ரோசின், க்ரோசிட்டின், சபிரனால் , கேம்ஃபிரோல் போன்றவேதிபொருள்கள் குங்குமப்பூவில் உள்ளன. இவைமனநலம், உணவு, உடல்ஆரோக்கியம் போன்றஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

மூட்டுகள் பலமாகும்

மூட்டுவலிஉடையோர் குங்குமப் பூஎடுத்துக் கொள்வதன் மூலம்மூட்டுசதைவீக்கங்கள் குறைகின்றது. மூட்டுபலவீனம் நீங்கி, மூட்டுகள் பலமாகிறது.

குங்குமப் பூ பால்:

சிறிதளவு பாலில்குங்குமப் பூ(saffron benefits in pregnancy) கலந்து கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கலாம். குங்குமப் பூவில்அதிகம்ஆரோக்கிய நன்மைகள் புதைந்து கிடைக்கிறது.

பொதுவாக பாலில்கால்சியம் அதிகமாகவே இருக்கிறது இதனுடன் இரண்டேஇரண்டுகுங்கும்ப் பூமட்டும் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம்உடலில்அதிகசக்திகள் கிடைக்கிறது, தசைகள்சீராகிறது மற்றும் உடலில்உள்ளபிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

மனநிலை:

கர்ப்பகாலத்தில் 10 கிராம்அளவுகுங்குமப் பூ(saffron benefits in pregnancy) சாப்பிட்டால் மனஅமைதியைக் கொடுக்கும் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது குங்குமப் பூ.

இரத்த அழுத்தம்:

கர்ப்பகாலத்தில் பெண்கள் பாலில்2 அல்லது3 அளவுகுங்குமப் பூவைஎடுத்துக் கொண்டால் இரத்தஅழுத்தத்தை குறைக்கும்.

ஜீரண சக்தி:

கர்ப்பகாலத்தில் பொதுவாக பெண்களுக்கு மலச்சிக்கள், ஜீரணபிரச்சனை மற்றும் வயிறுமந்தம்ஆகியபிரச்சனைகள் இருக்கும். அதனால்தினமும் பாலில்இரண்டுஅல்லதுமுன்றுகுங்குமப் பூவைகலந்துகுடித்து வந்தால் விரைவில் ஜீரணமாகும் தன்மைகுங்குமப் பூவுக்கு உள்ளது.

கர்ப்ப காலத்தில் காலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு:

கர்ப்பகாலத்தில் காலைஎழுந்தவுடன் சிலபெண்களுக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், சோர்வுபோன்றபிரச்சனைகள் உள்ளது. அதனால்தினமும் காலைஎழுந்தவுடன் குங்குமப் பூடீபோட்டுக் குடித்தால் இந்தபிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

அனிமியா:

கர்ப்பகாலத்தில் சிலபெண்களுக்கு  இரும்பு சத்தைஅதிகரித்து ஹூமோகுளோபின் அளவைபாதுகாக்கிறது குங்குமப் பூ(Saffron Benefits in pregnancy).

இதய நோய்கள்:

கர்ப்பகாலத்தில் நீங்கள் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டல் இதயநோய்ஏற்படவாய்ப்பு உள்ளது. அதாவதுஇரத்தகுழாயில் தேவையற்ற கொழுப்புகளை படியவைத்துஇதயநோயைஏற்படுத்தும். அதனால்கர்ப்பகாலத்தில் ஆரோக்கியம் அதிகம்இருக்கக்கூடிய குங்குமப் பூவை(saffron benefits in pregnancy) தேவையான அளவுசாப்பிட வேண்டும்.

குழந்தை அசைவு:

கர்ப்பகாலத்தில் ஒருடம்ளர்குங்குமப் பூவைசாப்பிட்டால் உங்கள்உடல்சற்றுவெப்பநிலைஉயர்ந்து, உங்கள்குழந்தை அசைவதைநீங்கள் உணர்வீர்கள். இருந்தாலும் அதிகமாக குங்குமப் பூசேர்த்துக் கொள்ளக்கூடாது.

ஊட்டச்சத்துகள்:

குங்குமப் பூவில்அதிகம்விட்டமின் ஏ, விட்டமின் சி, தயமின், ரிபோப்ளவின், நியசின் மற்றும் போலிக்அமிலம் ஆகியவை அதிகமாகவே  இருக்கிறது.

குங்குமப் பூ (Saffron Benefits in pregnancy):

இந்தகுங்குமப் பூ(saffron benefits) உலகளவில் உயர்ந்த மருத்துவ குணமுடையதாக விளங்குகிறது. இந்தியாவை பொருத்த வரை காஷ்மீர் மலைபிரதேசத்தில் இதை உற்பத்தி செய்கின்றனர்.

இவை மசாலாவின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பு ஈடுயிணையற்றதாக விளங்குகிறது.

குங்குமப் பூ அதிகம் எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் பொதுவாக பெண்கள் தன்குழந்தை சிவப்பாக பிறக்கவேண்டும் என்றுஆசைப்பட்டு குங்குமப் பூவைஅதிகமாகவே எடுத்துக் கொள்வார்கள. ஆனால்குங்குமப் பூவைஒருநாளைக்கு 10 கிராமுக்கு மேல்அதிகம்எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏன் என்றால் இதுதாய் மற்றும் குழந்தை இருவரையும் சேர்த்து மரணம்அடைய அதிக வாய்ப்புள்ளது. குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை.

.


Share Tweet Send
0 Comments
Loading...