பார்வைக் கூர்மை-கருட முத்திரை!

பார்வைக் கூர்மை-கருட முத்திரை!

செய்முறை :.

1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.

2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.

3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.

கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

குறிப்பு

இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பலன்கள்

1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.உடலின் நான்கு பாகங்களிலும் இந்த முத்திரையைச் செய்வதால், முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், வயிறு, நுரையீரல் மற்றும் இதயம் பலப்படும்.

5.கழிவுநீக்க மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் செயல்பாடு சீராகும். ரத்த ஓட்டம் சீராக பாயும். வேலைப் பளுவின் காரணமாக ஏற்படும் சோர்வில் இருந்து விடுபட்டு, உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்வு கிடைக்க உதவும்.

6.அடிவயிற்றுப் பகுதியில் செய்வதால், சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்று வலி, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆகிய பிரச்னைகளின் வீரியம் குறையும்.

7.தொப்புளுக்கு நேராக வைத்து இந்த முத்திரையைச் செய்வதால், உடலில் உள்ள வாயுக்கள் சமன்படுகின்றன. உடலில் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும் வலி, மதமதப்பு, உணர்ச்சியற்ற தன்மை சரியாகின்றன.

8.மேல் வயிற்றுக்கு நேராக செய்வதால், பசியின்மை, செரிமானப் பிரச்னைகள் சரியாகும். நெஞ்சுப் பகுதிக்கு நேராக செய்வதால், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா பிரச்னைகள் கட்டுக்குள் வரும்..


Share Tweet Send
0 Comments
Loading...