கருஞ்சீரகம் நன்மைகள்

கருஞ்சீரகம் நன்மைகள்

Names : Black caraway, Black cumins

Scientific Name : Nigella sativa

1.புற்றுநோய் விரட்ட

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்து அதன் மூலம் உடலில் புற்றுநோய் ஏற்படாமல் விரட்டி அடிக்க முடியும்.

2.சளி, இருமல், ஆஸ்துமா தொல்லை குணமாக

தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட  படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.

3.கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தும்

கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.

4.சிறுநீரக கற்கள் கரைய

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.

5.இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த

நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் இந்த விசயத்தை எதிர்கொள்ள கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

மேலும் கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

6.அல்சரை குணப்படுத்த உதவுகின்றது

வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும். அதுபோக தொடர்ச்சியாகக் கருஞ்சீரகத்தை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு அல்சர் வியாதி வர வாய்ப்பு இல்லை.

7.விக்கல் நீங்கும்

விக்கல் ஒரு சில சமயம் தொடர்ந்து விடாமல் வந்தபடியே இருக்கும். தண்ணீருக்கும் வேறு எந்த விஷயத்திற்கும் கூட விக்கல் கட்டுப்படாது. அந்த சமயத்தில் கருஞ்சீரகம் உதவும். கருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் கூட நின்று விடும்.

8.வயிற்றுப் பூச்சிகள் அழியும்

பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை இருக்கும். பூச்சித்தொல்லையால் அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த மாதிரி குழந்தைகளுக்கு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து பருக தரலாம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்வதால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

9.மலச்சிக்கல் நீங்கும்

கருஞ்சீரகத்தை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஒரு பிடியளவு கருஞ்சீரகம் மற்றும் ஒரு பிடியளவு கொத்தமல்லி தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை வெந்நீரிலோ, பாலிலோ சேர்த்துத் தொடர்ந்து அருந்தி வர, அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.

10.உடலில் சேர்ந்துள்ள ரசாயனங்களை அகற்றிவிடும்

இன்று பல்வேறு கலப்படமான பொருட்களின் மூலம் நம் உடலில் பல ரசாயனங்கள் கலந்து சேர்ந்து விடுகின்றன. இந்த கழிவுகள் இரத்தத்திலும் நுரையீரல்களிலும் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினையில் சரியாக கருஞ்சீரகம் சிறப்பாக வழிகாட்டுகிறது. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. நுரையீரலில் சேர்ந்துள்ள கழிவுகள் நீங்குகின்றன.

11.தலைவலி, மூக்கடைப்பு நீங்கும்

குளிர் காலத்தில் தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் அதிகமாகக் காணப்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலை வேளையிலும் இரவு தூங்கும் நேரத்திலும் கருஞ்சீரக எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கருஞ்சீரக எண்ணெய்யை நெற்றி, தலை, மூக்கு, நெஞ்சு போன்ற பகுதிகளில் பூசிக் கொள்வதன் மூலம் இந்த தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

12.உடல் பருமன் குறையும்

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது. தினம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம் பொடியைக் கலந்து அருந்தலாம். இதன் மூலம் தேவையில்லாத சதை குறையும்.

கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.

கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும்போது உடலிலொ தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும். மேலும் தோலிம் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும்.

பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.


Share Tweet Send
0 Comments
Loading...