கருங்குறுவை அரிசி

கருங்குறுவை அரிசி

மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும்

பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற

ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர்

பார்க்குள் இதயெண்ணிப் பார்.

(அகத்தியர் குணப்பாடம்)

இதன் பொருள் மணக்கத்தை, வாலன், கருங்குறுவை போன்ற அரிசிகள் புண்ணை ஆற்றும். சிறு நஞ்சை நீக்கும்.

120 நாட்களில் விளையும் இந்த கருங்குறுவை அரிசி, நவரை பருவத்திலும், குறுவை பருவத்திலும் நன்கு விளையக்கூடியது. நான்கு அடிவரை வளரும் தன்மை கொண்டது. நீர் நின்றாலும் தாங்கி வளர்ந்து மகசூல் அதிகம் கொடுக்கும் பண்புடையவை. ஆண்டு முழுவதும் இருந்தாலும் மக்கிப் போகாமல் மீண்டும் முளைக்கும் திறன் கொண்டவை. நெல்மணிகள் கருப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும்.

பலவித பண்டைய காலப்  பதிவுகளில் குறிப்பிடப்படும் இவ்வகை அரிசி சித்த மருத்துவத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோய்வாய்ப்பட்டிருபவர்கள் இந்த அரிசியின் கஞ்சியை தொடர்ந்து உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு திறன் பெற்று உடல் குணமடையலாம். வெண்புள்ளி, விசக்கடியினால் ஏற்படும் பக்கவிளைவுகளை போக்கவல்லது. கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து உண்டு வந்தால் யானைக்கால் நோய் மட்டுப்படும். மேலும் இதன் கஞ்சி  உடலை வலிமைப்படுத்தும்.

கருங்குறுவை அரிசி உண்பதால் ஏற்படும் நன்மைகள் :

கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, அதன் வீரியம் அதிகரிப்பதுடன் ‘கிரியா’ சக்தியின் ஊக்கியாகவும் செயல்படுகிறது.

நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசிக் கஞ்சியை குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து உடல் குணமடைவதாக கூறப்படுகிறது.

கருங்குறுவை அரிசியை கொதிக்க வைத்த சோறு, கள்ளிப் பால், மற்றும் தேன் போன்ற கலவையைக் கொண்டு களிம்பு (பசை) (lehyam) செய்யப்படுகிறது, அப்பசைக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக் (Filariasis) குணப்படுத்தும் பண்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருங்குறுவையின் அரிசியில் “குஷ்டம்” எனப்படும் வெண் புள்ளி, மற்றும் விசக்கடியால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றவைகளைப் போக்கும் சக்தி உடையது. மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ள, கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறி, ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும் அருமருந்தாக உருவாகிறது.இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்திபேதி (காலரா) மட்டுப்படுவதாக கூறப்படுகிறது.

மிகவும் இனிப்புச்(Sweet) சுவையுள்ள‌ இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த (Bile) வெப்பத்தையும் போக்கக் கூடியதாகவும், மனித உடலுக்குச் சுகத்தைக் கொடுக்க வல்லதாகவும் உள்ளது.

இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு (Dysentry) போன்றவைகளைப் போக்கும்.

இரவில் நீரூற்றிய சோற்றைப் பழையது என்பார்கள். இந்தப் பழையதை விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடுச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்றும், உடலில் ஒளி உண்டாகும் என்றும், மற்றும் வெறிநோய் (Insanity) முற்றிலும் நீங்கும் எனவும் கருதப்படுகிறது.

பழையச் சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்குமென்றும், இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

“மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும் பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர் பார்க்குள் இதயெண்ணிப் பார். “

மேற்கூறிய பாடலின் பொருளானது, மணக்கத்தை அரிசி, வாலான் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும் புண்ணையும் சிறுநஞ்சுகளையும் நீக்கும்.

கருங்குறுவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப்போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது.

இதன் நெல் தானியமணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.

அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ளது.



Share Tweet Send
0 Comments
Loading...