கொரோனாவை எதிர்க்க உடல்நலமும் மனநலமும்

கொரோனாவை எதிர்க்க உடல்நலமும் மனநலமும்

கொரோனா கடந்த ஒன்றரை வருடமாக நம் அனைவரையும் உடலாலும் மனதாலும் அச்சுறுத்தும் பெரும் நோயாகவும் இருந்துவருகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும், தற்காத்துக்கொள்ளும் மனப்பான்மையையும்  நாம்மேற்கொள்ளவேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்து கொள்ளத் தடுப்பூசியை நாடுவதை காட்டிலும் ஒவ்வொரு மனிதனின் உட்புற எதிர்ப்புச் சக்தியை வளர்த்து கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

உடல் நலம் காக்க உணவுகள்

தலைமுறை தலைமுறையாக நம்மிடம் வந்து சேர்ந்த சமையல் முறைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்குத் தேவையானவற்றைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை நமது வயிற்றில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள் மீது நேர்மறையான தாக்கத்தைச் செலுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு , எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடுவது அவசியம். இவற்றில் உள்ள வைட்டமின் C இரத்தச் செல்களில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.

பப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியுள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும்ஃபோலேட் ஆகியவை அதிக அளவில் உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தை அது மேம்படுத்தும்.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் பி -6 மற்றும் ஈ உள்ளிட்ட ஊட்ட சத்துகள் உள்ளன.

நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வைட்டமின் ஈ அவசியம். எனவே இதையும் உணவில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பாதாம், பாதாமி, நிலக்கடலை, தேதிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா -3 ஆகியவற்றில் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அவை வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் வளமான ஆதாரங்களாக இருக்கின்றன, அவை கொழுப்பில் கரையக்கூடியவை மற்றும் குளிர்ச்சியைத் தடுக்கவும் போராடவும் உதவுகின்றன.

காளான்

உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

மேலும் மஞ்சள், வேப்ப இலைகள், பூண்டு, கீரை, இஞ்சி, ப்ரோக்கோலி, பெல் பெப்பர்ஸ், கேரட், ஓட்மீல், தேன் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உங்களை வலிமையாகவும் வைத்திருக்கலாம்.

மனநலம் காக்க

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, இசை கேட்டல், புத்தக வாசிப்பு மற்றும் வேலைப் பளு இருந்த நாட்களில் நீங்கள் தவறவிட்ட பொழுதுபோக்குகள் போன்றவற்றின் மூலம் மனஅழுத்தத்தைக் கையாளுங்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்க உடல் சார்ந்த இயக்கத்தில் ஈடுபட வேண்டும். நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும் நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடல் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளவும் செரிமானத்தை மேம்படுத்திக்கொள்ளவும் வேண்டும். நமது உடல் சக்தியை மிக அத்தியாவசியமான செயல்பாடுகளுக்காக சேமித்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் இதயத்தின் நலனைப் பராமரிக்கும் வகையில் சீரான முறையில் தூங்குங்கள். உங்கள் உறக்கம் முழுமையான ஓய்வைத் தர வேண்டும்.

முறையான உணவுமுறைகளை கடைபிடிப்பதன் மூலமும் சரியான மனநலமும் தான் நம்மை கொரோனா என்னும் கொடிய நுண்கிருமியிடம் இருந்து நம்மை காக்க முடியும்.முடிந்தவரை சர்வேதேச அரசியலின் வலையில் சிக்காமல் தடுப்பூசியை தவிர்ப்போம்.தடுப்பூசி இல்லாத தரமான தலைமுறைகளாக மாற முயற்சிப்போம்.


Share Tweet Send
0 Comments
Loading...