நவகைலாயம் -கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் கோயில்

நவகைலாயம் -கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் கோயில்

மனித வாழ்க்கையில் செவ்வாய் தசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாக சொல்வார்கள். பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்க தாமதமாகும் என்பதுண்டு. இப்படிப்பட்டவர்கள், அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் கோடகநல்லூர் திருக்கோயிலாகும்.

நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் சிறப்புகள்

இத்திருக்கோயிலில் சுவாமி கைலாசநாதராகவும் அம்மாள் சிவகாமி அம்மனாகவும் அருள் பாலிக்கின்றனர் கோடகநல்லூரில் வடபுறமாக ஸ்ரீகைலாயநாதர் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கொடிமரம் கோபுரம் ஆகியவை கிடையாது. ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் பொழுது இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது.

திருக்கோயிலின் அமைவிடம்

திருநெல்வேலியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் செல்லும் சாலையில் நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோடகநல்லூர் அமைந்துள்ளது.

கல்வெட்டு சான்று: இவ்வூரிலுள்ள பெரிய பிரான் சுவாமி கோயில் கல்வெட்டில் கோடனூர் என்ற குலசேகர சதுர்வேதிமங்கலம் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகர சதுர்வேதம் என்றால் ருக்,யஜூர்,சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களை உதைவர்கள் வாழ்ந்த ஊர் என்று பொருளாகும்.

மூலவர்: கைலாசநாதர்

அம்மன்/தாயார்: சிவகாமி, அனந்தகவுர

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: தாமிரபரணி

ஊர்: கோடகநல்லூர்

தல வரலாறு :

பல ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டு இருந்தார். முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்து (சுள்ளி) பொறுக்குவதற்காக, முனிவரின் மகன் சென்றிருந்தான். அப்போது காட்டிற்கு வேட்டையாட வந்த பரிஷத் மகாராஜாவின் மகன், முனிவர் அமர்ந்து இருந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்தான்.

நீண்ட நேர வேட்டையாடலால் தாகம் ஏற்பட்டிருந்த ராஜ குமாரன், தண்ணீர் கேட்பதற்காக முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதில் விழவில்லை. தன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்க்காமல் இருக்கும் முனிவரின் மீது, ராஜகுமாரனுக்கு கோபம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில், முனிவரின் அருகே கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரது கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ் தியானத்தில் இருந்ததால், தனது கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக்கூட அவர் அறியவில்லை.

அப்போது முனிவரின் மகன், தனது தந்தைக்கு யாகம் செய்வதற்கான பொருட்களை சேகரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய யோகத் திறமையைக் கொண்டு, அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்துகொண்டான். இதையடுத்து அவனது கோபம், தன் தந்தையும், குருவுமானவரை அவமானப்படுத்திய ராஜகுமாரனின் மீது திரும்பியது.

‘எனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டவனின், தந்தையை பாம்பு தீண்டட்டும்’ என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாக மகாராஜாவிடம் தெரிவித்தனர்.

அதனைக்கேட்ட பரிஷத் மகாராஜா, தனது உயிரை சர்ப்பத்திடம்(பாம்பு) இருந்து காத்துக்கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் கட்டி வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரிஷத் மகாராஜாவை தீண்டியது. இதில் மகாராஜா இறந்து போனார்.

பின்னர் ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக்கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.

தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்த மாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நளமகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நளமகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.

அந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள்.

பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும், தமயந்திக்கும் திருமணம் செய்து வைத்தார். நளன், ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.

பரிஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோட கனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, ‘கோடகநல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.

அதன்படி கார்கோடகன் பாம்பு கோடகநல்லூருக்கு வந்து அங்குள்ள ஈசனை வழிபட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார்கோடகநல்லூர் என்றும், கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கார்கோடகநல்லூர் என்ற பெயர் திரிந்து கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

நடைதிறப்பு

  • காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
  • மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை

திருவிழாக்கள்

  • மாதாந்திர பிரதோஷம்
  • மார்கழி திருவாதிரை (டிசம்பர் – ஜனவரி)
  • மஹா சிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்)

மாவட்டம்: திருநெல்வேலிதாலியுடன் நந்தி கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று. இத்திருக்கோயிலில் கொடிமரம் கோபுரம் ஆகியவை கிடையாது. ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் பொழுது இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது.

இங்குள்ள நந்திக்கு, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலிமஞ்சளை, தாலிக்கயிற்றில் கட்டி, மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.


Share Tweet Send
0 Comments
Loading...