கணபதி காயத்ரி மந்திரம்

கணபதி காயத்ரி மந்திரம்

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.


"ஓம் ஏக தத்புருஷாய வித்மஹேவக்ர துண்டாய தீமஹிதந்நோ தந்தி ப்ரசோதயாத்"
.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும். இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும். உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும். இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

விநாயகர் ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


"ஒம் கம் கணபதியே நமஹ "

இது கணபதியின் மூல மந்திரம்.

மஹா கணபதி மந்திரம் :

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு!


இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!

பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.

கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!
சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!


Share Tweet Send
0 Comments
Loading...