களாக்காய் மரம்!!!

களாக்காய் மரம்!!!

மரத்தின் பெயர் : களாக்காய் மரம்

தாவரவியல் பெயர் : கேரிஸ்ஸா காரண்டாஸ்

ஆங்கில பெயர் : Bengal currant tree

தாயகம் : இந்தியா

மண் வகை : மணல்சாரி வறண்ட மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : அப்போசயனேசி

பொதுப்பண்புகள் :

மார்ச், ஏப்ரல் மாதத் தேனீக்களுக்கு, தேன் தரும் பூக்களைத் தரும் மரம்.

பச்சை இலைகள் செறிந்து, வெண்ணிறத்தில், பளிச்சென்று மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும். வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம் இந்த களாக்காய் மரம்.

இந்த மரத்தின் உயரம் 5 மீட்டர் ஆகும்.

களா செடியில் இரு வகைகள் உள்ளன. ஒன்று - சிறுகளா , மற்றொன்று பெருங்களா. இரண்டு களா செடிகளின் - காய்கள் , பழங்களையும் சாப்பிடலாம். இது ஒரு புதர்செடி தாவரமாகும். மேலும் இது மூலிகை தாவரமாகும். இந்த செடியின் பூ, காய், கனி, வேர், இலை என்று இதன் அனைத்து பாகங்களும் மருத்துவகுணம் நிரம்பி உள்ளது. இயற்கையாக , வேலியோரங்கள், மலைப்பாங்கான இடங்களில் வளரும். வருடத்துக்கு ஒருமுறை பூவெடுத்து , காய்பிடித்து, கனியாகும்.

புளிப்பு சுவைகொண்ட இந்த காய்களில் பால் இருக்கும். கிராமத்து பள்ளிக்கூடங்கள் முன்பு இவை விற்கப்படும். காரணம் களாக்காய்களை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இன்று நகரத்து தெருக்களிலும் இவை விற்கப்படுகின்றன. ரசாயன கலப்பு இன்றி, இயற்கையாக கிடைக்கும் இதன் காய்களையும், பழங்களையும் அனைவரும் உண்பது - உடலுக்கு நலம் விளைவிக்கும். பல்வேறு நோய்களை போக்கவல்லது. களாக்காயை ஊறுகாய் போட்டும் உண்ணலாம்.

கூறிய முட்கள் கொண்ட இந்த புதர்செடியின் இலைகள் முட்டைவடிவம் கொண்டவை , பசுமையான இலைகள் மற்றும் காய்கள் கொண்டது . பழம் கருப்பு நிறத்தில் இருக்கும். பூக்கள் வெண்மை நிறம் கொண்டது. இது ஒரு வறண்டநில தாவரம்.

"பலாக்காயை விட களாக்காய் மேல்' - என்று ஒரு சொலவடை கிராமத்தில் உண்டு. சிறிய காயாக இருந்தாலும் - பலன் அதிகம் கொண்டது, நம் மண்ணை பூர்வீகமாக கொண்ட தாவரம்.

மற்ற மொழிகளில் இதன் பெயர்கள்


இந்தி - karonda
மலையாளம் - karakka
தெலுங்கு - peddakalavi
மராத்தி - karavand
பெங்காளி - bairchi, karamon
குஜராத்தி - karamadai
ஒரியா - kerendo
சமஸ்கிருதம் - avighna
உருது - karwanah.

பயன்கள் :

இந்த மரத்தின் பழங்கள் மூலம் ஜாம், ஜெல்லி தயார் செய்யலாம். இது இரும்புச் சத்தும், வைட்டமின் சி சத்தும் உடையது.

இந்த மரத்தின் இலைகள், கிளைகள், மரம் ஆகியவை அடுப்பெரிக்க விறகாக பயன்படும்.

அடர்ந்த தழையமைப்பைக் கொண்டிருப்பதால், இவை வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி, காற்றைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது.

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன் :

ஆரோக்கியம் தரும் காய்

களக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இதில் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,

பித்தத்தை கட்டுப்படுத்தும். இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு களாக்காய் நல்லது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இலைகளில் காரிசிக் அமிலம், காரினால் போன்றவை உள்ளன. கனிகளில் அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டசத்துமிக்க களாக்காய்

இலைகள், கனி மற்றும் பட்டை போன்றவை மருத்துவ பயன் உடையவை. இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும். முதிராக்கனிகள் சத்து மிக்கவை. ஊட்டத்திற்கு உகந்தவை. வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

கண்நோய் தீரும்

தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டுவரக் கண்களிலுள்ள வெண்படலம், கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.

ஜீரணம் தரும் களாக்காய்

காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம், தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும். களாப்பழத்தை உணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.

களாப்பழம் உடல் சூட்டைத் தணிக்கும். சூடு காரணமாக தொண்டையில் வலி உள்ளவர்கள் இரண்டு வேளை மட்டும் களாப்பழத்தை உண்டால் தொண்டை வலி குணமாகும்.

கருப்பை அழுக்கு தீரும்

வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும். சளியகற்றும்,மாத விலக்கைத் தூண்டும். வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக் கலந்து தினமும் 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை தீரும்.

பிரசவமான பெண்களுக்கு 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு சுண்டக்காச்சி வடிகட்டி காலை, மாலை இருவேளை கொடுத்து வர மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

வளர்ப்பு முறைகள் :

களாக்காய் பழங்களை இரண்டு நாட்கள் வைத்திருந்தால், அவை சிறிது அழுகிய நிலைக்கு மாறிவிடும்.

பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால், விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி, மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மீது 50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும்.

விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும்.

பின்னர் நாற்று ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்ததும் தேவையான இடத்தில் எடுத்து நடவு செய்யலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.

எனவே தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்க வேண்டியதில்லை.

களாக்காய் சாகுபடி செய்யும் விதம்

'குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந் தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால்... விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி... மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது 50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும்.

விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்குமேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும்.

100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்!

மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்துக்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை.

நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறு மாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.'

செர்ரி தயாரிக்க, களாக்காய்!

''களாக்காய் ஆங்கிலத்தில் 'கரோன்டா'  என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட களாக்காய் செடிகளின் அறிவியல் பெயர், 'கரிஸ்ஸா கரன்டாஸ்'. வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்தச் செடிகள், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் காட்டுச்செடியாக மட்டுமே உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிந்த பல்லபந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம், களாக்காயில் புதிய ரகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிராக இதை அறிவித்துள்ளது. இவற்றின் காய் மற்றும் பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

காய்கள், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. விதை நீக்கம் செய்யப்பட்ட களாக்காயை நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து பேக்கரிகளுக்குத் தேவையான 'செர்ரி’ தயாரிக்கிறார்கள். இவற்றின் நாற்றுகளை விதை மற்றும் கட்டிங் மூலம் உற்பத்தி செய்யலாம்.

பெரும்பாலும் தொக்கு செய்துத் தனியாக அன்னத்துடன் பிசைந்து உண்பர்... அல்லது எலுமிச்சை ஊறுகாயோடு சேர்த்து நன்றாக ஊறியபின் சாதத்தோடுப் பிசைந்தும் பயன்படுத்துவர்...

மருத்துவ குணங்கள்களாக்காயால் காதடைப்பு, தாகம், பித்ததோசம், வமனம், அருசி, இரத்தபித்தம் இவை போகும்... மிகுந்த பசியை உண்டாக்கும்... இக்காய்களை நன்றாகக்கழுவி துண்டுகளாக அரிந்து உப்பிட்டுக் குலுக்கி சிறிது சாப்பிட்டால் பித்தம் நீங்கும்...


Share Tweet Send
0 Comments
Loading...