கலைஞர் மு. கருணாநிதி பிறந்த தினம் இன்று..!

கலைஞர் மு. கருணாநிதி பிறந்த தினம் இன்று..!

🌄 தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

🌄 இவர் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.

🌄 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். பின்பு, அதுவே நிலைத்து விட்டது. இவர் திரைக்கதை எழுதிய பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி போன்ற படங்கள் மிகவும் பிரபலம் பெற்றவை.

🌄 இவர் தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்டார். தமிழகத்தின் முதல்வராக இவர் ஐந்துமுறை பதவி வகித்துள்ளார்.

🌄 தமிழக அரசியலில் தொடர்ந்து பங்காற்றி வரும் முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான இவர் இன்று 95வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


Share Tweet Send
0 Comments
Loading...