காட்டுயானம் அரிசி

காட்டுயானம் அரிசி

பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று காட்டுயானம். சிவப்பு வகை அரிசிகளில் சற்று தடிமனான அரிசி வகை. மற்ற அரிசி வகைகளை விட மருத்துவ குணம் அதிகம் உடையது. இந்நெல் அறுவடையின் போது நன்கு செழித்து வளர்ந்து யானையை மறைக்கும் அளவுக்கு வளர்வதால் இப்பெயர் பெற்றது.சராசரியாக எட்டு அடி வளரும் ராட்சஷ தாவரம் இது.அதனால் தான் காட்டுயானம் என்றுபெயர்.காட்டுயானம் அரிசி இருநூற்று பத்து நாட்களுக்கு விளைவிக்கப்படுகிறது. அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு இறுப்பு வைக்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறக்கக்கூடாது என்ற காரணத்தால் இத்தனை கஷ்டப்பட்டு ஒரு விவசாயி இந்த அரிசியை உருவாக்குகிறார்.

இந்த அரிசியை சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. மெதுவாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு அரிசி இது.

ரத்தத்தில் சர்க்கரையை சேர்க்கும் கிளைசெமிக் வீதம் இதற்க்கு மற்ற அரிசிகளை விடவும் குறைவு.எனவே,சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் காட்டுயானம் சிறப்பு வாய்ந்தது.பசியை கட்டுப்படுத்துவதால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற உணவு.தமிழகம் முழுவதும் எல்லா நிலத்திலும் எல்லா காலங்களிலும் வறடிச்சியிலும் விளையக்கூடிய பயிர் இது.165 நாட்களில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும்.தண்டுப்பகுதி வலுவாக உள்ளதால் பூச்சித்தாக்குதலை எளிதாக சமாளிக்கும்.

மருத்துவ குணங்கள்

  • கால்சியம் சத்துக்கள் உள்ளதால் எலுமண்டலத்திற்கு தேவையை பூர்த்தி செய்ய  உதவும்.
  • சர்க்கரை நோயின் தாக்கத்தை  குறைக்க உதவும்.
  • அனைத்து வகையான புற்று நோய்யாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
  • 30 வயது முதல் பெண்களுக்க ஏற்படும் Low bone density குறைபாட்டினை போக்கவல்லது.
  • தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்க உதவும்.
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் அரிசி வகையாகும் .
  • Antioxidants அதிக அளவில் உள்ளது .

Share Tweet Send
0 Comments
Loading...