உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: Magnoliophyta
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Gentianales
குடும்பம்: Rubiaceae
துணைக்குடும்பம்: Ixoroideae
சிற்றினம்: Vanguerieae
பேரினம்: Canthium
இனம்: Canthium coromandelicum
தாவர வகைப்பாடு : Canthium parviflorum
தமிழகத்தின் பழத்தாவரங்களில் ஒன்றாகும். இது காரச்செடி என்றும் அழைக்கப்படும் இதன் காய்கள் காரக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முள்செடியாகும். தமிழகமெங்கும் காணப்படுகின்றது. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதன் இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடியாகும். இதன் காய்கள் பச்சை நிறத்தில் காணப்படும். பிறகு மஞ்சள் நிறமாக முதிர்ந்து மங்கலான மஞ்சள் நிறப் பழமாகும். இதன் காய்கள், பழங்கள் உண்ணக்கூடியவை.

இதன் இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இத்தாவரம் தொண்டை நாட்டில் காஞ்சி நகருக்கு அருகில் உள்ள திருக்கச்சி நெறிக் காரைக்காடு என்னும் கோயிலில் தலமரமாக உள்ளது.
காரை மரம் அனைத்து மருத்துவ முறைகளும் பயன்படுத்தும் மூலிகை
மனிதர்களைத் தாக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபோரம் மலேரியாக் கிருமிகளைக் கட்டுப் படுத்தும் திறன் கொண்டது

மரத்தின் தமிழ்ப் பெயர்கள் : காரை, கருந்தும்பி, தும்பி, தும்பிலி
தாவரவியல் பெயர் : டையோஸ்பைரோஸ் மெலனாக்சைலான் (DIOSPYROS MELANOXYLON)
பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : ஈஸ்ட் இந்தியன் எபோனி ட்ரீ (EAST INDIAN EBONY TREE)
தாவரக்குடும்பம் : எபினேசியே (EBENACEAE)
மரத்தின் வகை : வறண்டநிலத் தாவரம்.
மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; இதன் இலைகளில் சுருட்டிய பீடிகள்தான் இழுக்க இழுக்க இன்பம் தரும் என்கிறார்கள் பீடிப் பிரியர்கள்.
பூக்கள் : மார்ச் ஏப்ரலில் இலைகளை உதிர்த்து, ஏபரல் முதல் ஜூன் வரை பூக்கள் பூத்து காய்க்கும்.
பட்டை : டேனின் நிறைந்து தோல்பதனிட பட்டையை பயன்படுத்தலாம்.

மரம் : வேளாண் கருவிகள்;, பில்லியர்ட் கழிகள், வண்டிச்சட்டங்கள், மற்றும் தூண்கள், கடைசல் வேலைகள், பொம்மைகள்; செய்ய, காகிதம் தயாரிக்க மரம் தரும் ; கவர்ச்சிகரமான பியானோ பிரியர்கள் ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’ என்று இதற்கான சாவிகளை இந்த மரங்களில்தான் செய்ய விரும்புவார்கள்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்;; ;வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
மரத்தின் தாயகம் : இந்தியா
ஏற்ற மண் : வறண்ட மணல்சாரி மண்
நடவுப் பொருள் : விதைகளை 24 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊரவைத்து நட்டால் சீக்கிரம் முளைக்கப் பார்க்கும்.
மரத்தின் உயரம் : 15 மீட்டர்.
மருத்துவம் : ஆயர்வேதம், சித்தமருத்துவம், யுனானி, மற்றும் நாட்டு மருத்துவம் எனப் பரவலாக பயனபடுத்துகிறார்கள்.
மரங்கள் இருக்கும் இடங்கள் : நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை.

உயிர்வேலி
தேனீக்கள் அதிகமாக விரும்பும் பூக்களில் ஒன்றாகும் இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணுகிறது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் காரை பழம் சாப்பிட்டால் 100% குணமாகும். ஆடு இதன் இலைகளை விரும்பி உண்ணும்.
உயிர்வேலியில் அவசியம் இருக்க வேண்டிய மரம். பல நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது காரை மரங்கள். அத்தி பழத்துக்கு நிகராண ஒரு பழம் இருக்கிறதென்றால் அது காரைப்பழம் தான்.
தீவினை அகற்றும் காரைமடை அரங்கநாதர் கோயில் தலமரம் காரை மரம் தான்.
காஞ்சிபுரத்திற்கு அருகாமையிலுள்ளது கச்சிநெறிக்காரைக்காடு; இத்தலத்தின் தலமரம் காரை ஆகும். இஃது இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடி. பச்சை நிறக் காய்களையும், மஞ்சள் நிற பழங்களையும் கொண்டுள்ளது. பழங்கள் உண்ணக் கூடியவை. இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.
