ஜாதிக்காய் மருத்துவ பலன்கள்

ஜாதிக்காய் மருத்துவ பலன்கள்

ஜாதிக்காய் ஓரு அறிய மற்றும் பல்வேறு நற்குணங்கள் கொண்ட கொட்டை வகையை சேர்ந்த ஒரு வகை மூலிகையாகும். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. அன்றாட வாழ்வில் இதன் பலன்கள் ஏராளம். இதனை சரியான முறையில் பயன் படுத்தி வந்தால், அதனால் உண்டாகும் நன்மைகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். ஜாதிக்காய் ஆங்கிலத்தில் ‘nutmeg’ என அழைக்கபடுகிறது.ஜாதிக்காயில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

ஜாதிக்காய் இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

* ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

* ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

​பருக்கள் குணமடைய

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும். முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை நோய்க்கு ஜாதிக்காய்

அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தூக்கமின்மை பிரச்சனை

ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.

குழந்தைகள் மருத்துவம்

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த ஜாதிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று போக்கு ஏற்படும் அப்போது இந்த ஜாதிக்காய் தூளை மிகவும் குறைந்த அளவில் பசுப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று போக்கு குணமாகும். மேலும் தூங்காமல் அழுது கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஜாதிக்காய் தூளை சூடான பாலில் கலந்து கொடுக்க பலன் கிடைக்கும். குழந்தைகளை தூங்க வைக்க இதை தினந்தோறும் எல்லாம் தரக்கூடாது. அதோடு இதை அதிக அளவிலும் குழந்தைகளுக்கு நிச்சயம் தர கூடாது.

ரத்த சுத்தி

ஜாதிக்காய் சற்று அமிலத்தன்மை மிக்க ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயாகும். எனவே இதை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது.

வயிற்று பிரச்சனைகள்

நாம் உண்ணும் உணவை நன்றாக செரிமானம் ஆக வயிறு குடல் மற்றும் இதை செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும். குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையில் உட்கொள்ள குடல்புழுக்கள் நீங்க பெறுவார்கள்.

தாம்பத்ய பிரச்சினை தீர

இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகமிருக்கிறது. இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்த நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.

கொழுப்பைக் கட்டுக்குள் வைக்க

ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ரால் உடல் பருமனாலும் அவதிப்படுகிறவர்கள் ஏராளம். அப்படி உடல் பருமனாலும் கொலஸ்ட்ராலாலும் அவதிப்படுகிறவர்கள் தங்களுடைய உணவில் அடிக்கடி ஜாதிக்காய் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். ரத்தத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். அதோடு மட்டுமின்றி புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமையும் ஜாதிக்காய்க்கு உண்டு.


Share Tweet Send
0 Comments
Loading...