ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

பிரிட்டிஷ் படையை எதிர்த்து 29 வயதில் வீர மரணமடைந்த ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாறு!

  • ஜான்சி ராணியின் (Jhansi Rani) இயற்பெயர் மணிகர்ணிகா
  • குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள் வீச்சு போன்ற தற்காப்புக் கலைகளை முறையாக பயின்றவர்
  • ஆங்கிலேயர்களை எதிர்த்து துளியும் பின் வாங்காமல் தன் கடைசி மூச்சு வரை போராடியவர் ஜான்சி ராணி.

ஜான்சி ராணி அவர்கள் வட மத்திய இந்தியாவில் இருந்த ஜான்சி என்ற இடத்தின் ராணியாக இருந்தவர். ஆணுக்கு நிகராக குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள் வீச்சு போன்ற கலைகளை கற்று தேர்ந்தவர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு: 19 நவம்பர் 1828

பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா

இறப்பு: 18 ஜூன் 1858

தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு :

ஜான்சிராணி இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828-ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தார். இவர் மராட்டிய பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா. இவரை குடும்பத்தினர் செல்லமாக மனு என்று அழைத்து வந்தனர்

இளமைப் பருவம் :

ஜான்சிராணி தனது 4 வயதிலேயே தாயை இழந்துவிட்டார். எனவே தந்தை மௌரியபந்தர் அரவணைப்பிலேயே வளர்க்கப்பட்டார். ஜான்சிராணி இயற்கையிலேயே போர்க்குணம் நிறைந்து காணப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே போர்புரியும் ஆசையோடு வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல், குதிரை ஏற்றம் போன்ற கலைகளை எல்லாம் எளிதாகவும், முறையாகவும் கற்றுக்கொண்டார். அக்காலத்திலேயே ஒரு ஆணுக்கு நிகரான வீரம் கொண்ட பெண்ணாக இருந்து வந்தார்.

திருமணம் :

மணிகர்ணிகாவை 1840-ஆம் ஆண்டு அவரது பதினான்காம் வயதில் அப்போது ஜான்சியை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ராஜா கங்காதர ராவ் நிவால்கர் என்பவருக்கு அவரது தந்தை மணமுடித்து கொடுத்தார். அவரது திருமணம் ஜான்சியில் இருந்த பழைய விநாயகர் கோவிலில் நடைபெற்றது.

குடும்ப வாழ்க்கை :

மணிகர்ணிகா திருமணத்திற்கு பிறகு ராணி லக்ஷ்மி பாய் என்று அழைக்கப்பட்டார். பின் ஜான்சியின் ராணி ஆக பதவி ஏற்றுக்கொண்டார். ஜான்சியின் மன்னரை மணந்து ராணியானதால் மணிகர்ணிகா அன்று முதல் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டார்.

1851-ஆம் ஆண்டு ஜான்சிராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாமோதர் ராவ் எனப் பெயரிட்டார். ஆனால் குழந்தை நான்கு மாதத்தில் இறந்துபோனது. தாமோதர் ராவின் இறப்பின் பிறகு மன்னரின் உடல் நிலை மோசமானது.

எனவே ஆனந்த ராவ் என்னும் குழந்தையை தத்தெடுத்து அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயரிட்டார் ஜான்சிராணி. இருப்பினும் மகனின் இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மீள முடியாததாலும், உடல் நிலை மேலும் மோசமானதாளும் கங்காதர ராவ் நிவால்கர் நவம்பர் 21,1853-ஆம் ஆண்டு காலமானார்

படையெடுப்பு :

தத்தெடுத்த குழந்தை இந்து மரபின் படி லட்சுமிபாயின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும் அக் குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். மறுப்பு கோட்பாட்டின்படி ஜான்சியின் அரசை கைப்பற்ற “லார்ட் தல்ஹெளசீ”என்னும் ஆங்கிலேய அதிகாரி முடிவு செய்தார்.

லட்சுமி பாய் ஆங்கிலேய வழக்கறிஞர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அதன் பிறகு அவர் லண்டனில் அவரது வழக்கை தாக்கல் செய்தார். இருப்பினும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

ஆங்கிலேய அரசு லட்சுமிபாயின் அரசு நகைகளை பறிமுதல் செய்ததுமட்டுமில்லாமல் ஜான்சி கோட்டையை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பித்தது. ஜான்சி ராணி கோட்டையை விட்டு வெளியேறி ஜான்சியிலுள்ள “ராணி மஹாலுக்கு” சென்றார்.

போர் :

ஜான்சி கோட்டையை விட்டு வெளியேறினாலும், ஜான்சி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதில் ராணி உறுதியாக இருந்தார். மேலும் ராணியை கோட்டையை விட்டு வெளியேற செய்ததால் அது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.

ஜான்சி ராணி தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். அதுமட்டுமின்றி ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய படையில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை. அதில் பெண்களும் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய கிளர்ச்சி :

1857ல் இந்திய கிளர்ச்சி ஏற்பட்டது அதன் முதன் காரணம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைவரும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அந்த சமயம் அவர்கள் ஜான்சி ராணியினை பற்றி அதிகம் யோசிக்க வில்லை .

அவர்கள் கோட்டையை விட்டு வெளியேற சொன்ன அந்த தருணத்தில் இருந்து அவருக்கு ஆங்கிலேயர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணம் தோன்றியது. இதனால் தனது ஆதரவாளர்களை தேடி சென்று சேர்த்தார் . தனது படை பலத்தினை அதிகரித்து கொண்டு போருக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அப்போரை ராணிலட்சுமிபாய் தனது அண்டை நாடுகளான ஒர்ச்சா மற்றும் டாடியா வைத்து படையெடுத்து ஜான்சியை பாதுகாத்தார்.

இதுவே 1858-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான்சியின் மீது பிரிட்டிஷ் ராணுவம் படையெடுக்க காரணமாக அமைந்தது. ஜான்சிகும் பிரிட்டனுக்கும் ஒரு வாரத்திற்கும் மேல் போர் நீடித்தது.

இறுதியாக இரண்டே வாரத்தில் ஜான்சியை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. அந்த போரில் ராணி லக்ஷ்மிபாய் ஆண் வேடம் பூண்டு இருந்ததால் அவரை யாரும் அடையாளம் காணவில்லை. அதன் வாயிலாக தன் வளர்ப்பு மகளை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

மரணம் :

அங்கிருந்து தப்பித்து லக்ஷ்மி பாய் கல்பியில் தஞ்சமடைந்தார். அங்கு அவர் 1857-ம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சியில் பங்குபெற்ற “தத்தியா டோப்” இன்னும் மாவீரரை சந்தித்தார். ஆங்கிலேய அரசு குவாலியரை கைப்பற்ற முகாமிட்டிருந்தது.

இதை அறிந்த லக்ஷ்மி பாய் ஆங்கிலேயப் படையை எதிர்த்து “கோட்டாகி சேராய்” என்னுமிடத்திலிருந்து போரிட்டார். ஆனால் ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல் 18,ஜூன்1858-ஆம் ஆண்டு ஜான்சிராணி இறந்து விட்டார். அவர் மரணமடைந்த மூன்றாவது நாளில் குவாலியரை ஆங்கில அரசு கைப்பற்றியது. எனினும் ஜான்சி ராணியின் விருப்பப்படி அவரது உடலை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுவதற்குள், அவரது உடல் உள்ளூர் மக்களால் குவாலியரின் அருகில் தகனம் செய்யப்பட்டது.

‌                                   ‌


Share Tweet Send
0 Comments
Loading...