இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானா்.

இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானா்.

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 54.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது.

பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.

கணா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...