நவகைலாயம் - இராஜபதி கைலாசநாதர் கோயில்

நவகைலாயம் - இராஜபதி கைலாசநாதர் கோயில்

இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் வழியில் குறும்பூர் அருகில் இத்திருத்தலம் உள்ளது. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது.

இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு இலிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவார தெய்வங்கள் யாரும் இல்லை. இங்குள்ள இலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. இலிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலம் பற்றி தெரிந்த பக்தர்கள் மட்டும் இங்கு வருகின்றனர். பக்தர்கள் இந்த இலிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.

நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில், உள்ளவர்களும், கேது ஸ்தலமான, காளகஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு. ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் தீப ஆராதனை வில்வ அர்ச்சனை வழிபாடு செய்து பரிகாரம் செய்யும் தலம் ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயிலில் மட்டுமே. சிவனடியார்கள், சிவபக்தர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் வேறெங்கும் காணக்கிடைக்காத நவலிங்கங்கள் சந்நிதி உள்ளது. விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடனுறை முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

மூலவர்–கைலாசநாதர்

அம்மன்–சவுந்தர நாயகி

தீர்த்தம் : பாலாழி

தலவிருட்சம்: வில்வம்

பழமை–500 வருடங்களுக்கு முன்

ஊர்–ராஜபதிமாவட்டம்–தூத்துக்குடிமாநிலம்–தமிழ்நாடு

தல வரலாறு

பொதிகை மலையில் அமர்ந்து தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவர் முக்திப்பேறு விரும்பிய தமது சீடரான உரோமச முனிவரிடம் ஒன்பது தாமரை மலர்களை தாமிர பரணி நதியில் விடுகிறேன் அந்தத் தாமரை மலர்கள் ஒதுங்கும் கரையோரங்களில் சிவாலயம் எழுப்பி சிவ வழிபாடு செய்யுமாறு பணித்து அனுப்பினார். ஒன்பது தாமரை மலர்களில் எட்டாவது மலர் தங்கிய இடம் ராஜபதி. அகத்தியரின் ஆணைப்படி உரோமச முனிவர் இத்தலத்திலும் சிவவழிபாடு செய்து பலன் பெற்றார். மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால் இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. தற்போது இருக்கும் இந்த கோயில் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலாகும். இங்குள்ள லிங்கத்தின் கீழ் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இருந்தது, அது வெள்ளப்பெருக்கில் மூழ்கி அழிந்தது. தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. தனிச் சிறப்பு: நவகைலாயத்தில் இது நவகிரகங்களில் கேதுவுக்கான தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்திற்கு இணையான கேது தலமாக திகழ்கிறது. பழைய கோயிலின் மூலவராக கூறப்படும் ஒழுங்கற்ற வடிவில் இருக்கும் ஒரு லிங்கம் மட்டும் கிடைக்கப்பெற, அதையே தற்போது புதிதாக கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலில் வைத்து வணங்கப்படுகிறது. இங்குள்ள லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்.

தனிச் சிறப்பு: நவகைலாயத்தில் இது நவகிரகங்களில் கேதுவுக்கான தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்திற்கு இணையான கேது தலமாக திகழ்கிறது. பழைய கோயிலின் மூலவராக கூறப்படும் ஒழுங்கற்ற வடிவில் இருக்கும் ஒரு லிங்கம் மட்டும் கிடைக்கப்பெற, அதையே தற்போது புதிதாக கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலில் வைத்து வணங்கப்படுகிறது. இங்குள்ள லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஒருவருடைய ஆயுள் காலத்தில் கேது திசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த திசை காலத்தில் இந்த தலத்திற்கு செல்வது மிகவும் சிறப்பானது. இங்கு கேது பரிகார பூஜை சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குகிறது. மேலும், இங்குள்ள விவசாயிகள் தங்களது விவசாயம் செழிக்கவும் கால்நடைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் கேதுவின் அம்சமாக இருக்கும் இத்தல பெருமானை வேண்டிக்கொள்ளலாம்.

நவகிரகதோஷ நிவர்த்தி

தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் தீப ஆராதனை வில்வ அர்ச்சனை வழபாடு செய்து பரிகாரம் செய்யும் தலம் ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயிலில் மட்டுமே. சிவனடியார்கள், சிவபக்தர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் வேறெங்கும் காணக்கிடைக்காத நவலிங்கங்கள் சந்நிதி உள்ளது.

திருவிழா:

திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு

கோரிக்கைகள்:

ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

இந்த சிவனுக்கு பலவர்ண ஆடை சாத்தி, கொள்ளு நைவேத்யம் படைத்து வழிபடலாம். கோயிலைப் புதுப்பிக்க நிதியுதவி செய்யலாம்.
Share Tweet Send
0 Comments
Loading...