யுனைட்டட் கூட்டுறவு வங்கி இனி இயங்காது

யுனைட்டட் கூட்டுறவு வங்கி இனி இயங்காது

யுனைட்டட் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நிதி சிக்கல்களில் சிக்கியுள்ள வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. இந்த வரிசையில், மேற்கு வங்க மாநிலம் பாக்னானில் இயங்கி வரும் யுனைட்டட் கூட்டுறவு வங்கியின் (United Co-operative Bank) உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

யுனைட்டட் கூட்டுறவு வங்கியிடம் போதிய மூலதனமும், வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் வங்கி உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

எனினும், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் அச்சப்பட்ட தேவையில்லை. ஏனெனில், டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உறுதி கழகம் வாயிலாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழு பணமும் திருப்பிச் செலுத்தப்பட்டுவிடும்.

வங்கி சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கு யுனைட்டட் கூட்டுறவு வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், டெபாசிட் பெறுவது, டெபாசிட்டை திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி தொடர்ந்து இயங்குவது வாடிக்கையாளர்களுக்கு நல்லதல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...