இன்று இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி பிறந்த தினம்: ஜூன் 9

இன்று இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி பிறந்த தினம்: ஜூன் 9

👉 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார்.

👉 இவர் 1972-ல் இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும், மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.

👉 1979-ல் காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது(Asia Region Award), பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

👉 மேலும், இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

👉 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது.  

👉2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2011இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...