திரையில் கலக்கிய கவுண்டமணி

திரையில் கலக்கிய கவுண்டமணி

கவுண்டமணி (சுப்பிரமணியன் கருப்பையன்) என்னும் இயற்பெயரினை கொண்டு திரையுலகிற்குள் அறிமுகமான இவர், திரையுலகில் பெற்ற புகழின் அடையாளமாய் இவர் கவுண்டமணி என்று அனைவராலும் அறியப்பட்டார்.
கவுண்டமணி 1964-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையில் பிரபல நகைச்சுவையாளராக அனைவராலும் கௌரவவிக்கப்பட்டார். இவர் நகைச்சுவையாளராக மட்டும் இல்லாமல் நாயகனாகவும், சிறிய கதாபத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயற்பெயர்: சுப்பிரமணி

பிறப்பு: மார்ச் 18, 1939

பிறப்பிடம்: வல்லகொண்டபுரம், கோயம்புத்தூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பெற்றோர்: கருப்பையா,அன்னாம்மா

பணி: நடிகர்

நாட்டுரிமை: இந்தியன்

மனைவி:சாந்தி

குழந்தைகள்:  செல்வி, சுமித்ரா

ஆரம்பகால வாழ்க்கை

இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி பயணம்

1976 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த் அவர்கள் கூறும் “இதெப்படி இருக்கு…?” என்ற வசனத்திற்கு, கவுண்டமணி பேசும் “பத்த வெச்சுட்டியே பரட்டை” என்ற டயலாக் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாம் நடித்த நான்காவது படத்திலேயே, தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையை உலகத்திற்கு வெளிபடுத்திய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் மற்றுமொரு நகைச்சுவை நடிகராக செந்திலுடன் இணைந்து, பல நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து பெரும் வெற்றிக்கண்டார்.

குறிப்பாக சொல்லப்போனால், எண்ணற்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த கவுண்டமணி-செந்தில் என்ற கூட்டணி படிப்படியாக பல வெற்றிப் படிகளில் கால்பதித்து, தமிழ் திரைப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்துவிட்டது. செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வந்த ‘வாழைப்பழம் காமெடி’, ‘வைதேகி காத்திருந்தால்’ திரைப்படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ திரைப்படத்தில் ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா’, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ ,சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய 'அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா' என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவைப் பதிவுகளாக இருந்து வருகிறது.

கவுண்டமணி நடித்த சில திரைப்படங்கள்

‘பதினாறு வயதினிலே’ (1977),  ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ (1979),

‘நெற்றிக்கண்’ (1981),  ‘பயணங்கள் முடிவதில்லை’ (1982),

‘அடுத்த வாரிசு’ (1983), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘

கன்னிராசி’ (1985), ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ (1985),

‘ஜப்பானில் கல்யாண ராமன்’ (1985), ‘பாடும் பறவைகள்’ (1985),

‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘இதயக் கோயில்’ (1985),

‘உதய கீதம்’ (1985), ‘மிஸ்டர் பாரத்’ (1986),

‘பேர் சொல்லும் பிள்ளை’ (1987), ‘நினைவே ஒரு சங்கீதம்’ (1987),

‘என்னப் பெத்த ராசா’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989),

‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ (1989), ‘மைடியர் மார்த்தாண்டன்’ (1990),

‘நடிகன்’ (1990), ‘நீங்களும் ஹீரோதான்’ (1990),

‘ஊரு விட்டு ஊரு வந்து’ (1990), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990),

‘பட்டணத்தில் பெட்டி’ (1990), ‘பாட்டுக்கு நான் அடிமை’ (1990),

‘ராஜாவின் பார்வை’ (1990), ‘சின்னத்தம்பி’ (1991),

‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1991), ‘என் ராவின் மனசுலே’ (1991),

‘சேரன் பாண்டியன்’ (1991), ‘ரிக்ஷா மாமா’ (1992),

‘பங்காளி’ (1992), ‘திருமதி பழனிசாமி’ (1992),

‘மன்னன்’ (1992), ‘வில்லுப்பாட்டுக்காரன்’ (1992),

‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ (1992),

‘சூரியன்’ (1992), ‘சின்னவர்’ (1992), ‘ஊர் மரியாதை’ (1992), ‘

பெரிய கவுண்டர் பொண்ணு’ (1992), ‘உடன் பிறப்பு’ (1993),

‘ஜென்டில்மேன்’ (1993), ‘பொன்னுமணி’ (1993),

‘பொறந்த வீடா புகுந்த வீடா’ (1993), ‘எஜமான்’ (1993),

‘கோயில் காளை’ (1993), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994)

‘உழைப்பாளி’ (1993), ‘ராசகுமாரன்’ (1994), ‘ஜெய்ஹிந்த்’ (1994),

‘வரவு எட்டணா செலவு பத்தணா’ (1994), ‘தாய்மாமன்’ (1994),

‘ரசிகன்’ (1994), ‘கூலி’ (1995), ‘கர்ணா’ (1995), ‘முறை மாமன்’ (1995),

‘முறை மாப்பிளை’ (1995), ‘நாடோடி மன்னன்’ (1995),

‘லக்கிமேன்’ (1995), ‘மேட்டுக்குடி’ (1996), ‘இந்தியான்’ (1996),

‘டாட்டா பிர்லா’ (1996), ‘காதலர் தினம்’ (1999),

‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ (2001).

கவுண்டமணியின் நகைச்சுவை சொல்லாடல்கள் சில

  • ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி.’ (சூரியன்)
  • ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.’ (சூரியன்)
  • ‘நான் ரொம்ப பிஸி.’ (சூரியன்
  • ‘நாட்டுல இந்தத் தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா.’ (மன்னன்)
  • ‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.’
  • ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புட சாமி.’ (மாமன் மகள்)
  • ‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை.’ (வைதேகி காத்திருந்தால்)
  • ‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’ (வைதேகி காத்திருந்தால்)

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று, ஒரு தனி இடத்தை பிடித்த கவுண்டமணி அவர்கள், தன் பெயருக்கு முன்னாள் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்ள விரும்பாத அற்புத மனிதர். குறிப்பாக சொல்லப்போனால், இதுவரை தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் கவுண்டமணி அவர்களுக்கு தனியிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கவுண்டமணி சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

அங்கீகாரம்
நடிகர் கவுண்டமணி-யின் நகைச்சுவை திறனை பாராட்டி பல திரையுலக சார்ந்த அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை அளித்து இவரை கௌரவ படுத்தியுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...