எண்ணெய்ப்பனை மரம்

எண்ணெய்ப்பனை மரம்

பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது.

பயிர்: எண்ணெய்பனை

அறிவியல் பெயர்: லாயிஸ்

கினீன்ஸிஸ்குடும்பம்: பால்மே

செம்பனை எண்ணெய் எனப்படுவது செம்பனை அல்லது எண்ணெய்ப் பனை எனப்படும் ஒரு விதப் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இது தென்னையைப் போன்று ஒரு மரம். எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும் இம்மரம் பாமாயில் பனை, செம்பனை எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டு பனை இனங்களில் இருந்து பாம் ஆயில் கிடைக்கிறது.

ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது எலியிஸ் குயினென்சிஸ் (Elaeis quineensis) என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை என்கின்றனர். மற்றொன்று அமெரிக்கன் பாமாயில். இது எலியிஸ் ஒலிபெரா (Elaesis oleifera) என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது அமெரிக்கன் எண்ணெய்ப் பனை ஆகும். இது தவிர மாரிபா பனை (Attalea maripa) என்கிற மரத்திலிருந்தும் பாமாயில் எடுக்கப்படுகிறது . இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் இருக்கும்.

ஓர் செம்பனை அல்லது எண்ணெய்ப் பனைத் தோப்பு
இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைசீரியா முதலிய நாடுகளில் பெருமளவு பயிர்செய்யப் படுகிறது. இப்பனைப் பயிர்செய்கையினால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகக் கூறப்பட்டாலும் இவை பயிரிடப்படும் நாடுகளில் காடழிப்புக்கு இது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தாயகம்

எலியிஸ் குயினென்சிஸ் என்கிற பனையின் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும். இப்பனை தற்போது இந்தோனேசியா, மலேசியா, கென்யா, நைஜீரியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. எலியிஸ் ஒலிபெரா என்கிற இனத்தின் தாயகம் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவாகும். மேலும் இது ஹோண்டுராஸ் முதல் வடகத்திய பிரேசில் வரை பரவியுள்ளது. இந்த இனங்கள் அரிகேசி (Arecaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு இனங்களையும் இணைத்து புதிய கலப்பினங்களையும் உருவாக்கியுள்ளனர்.

வரலாறு

எலியிஸ் (Elaeis) என்கிற கிரேக்கச் சொல்லுக்கு எண்ணெய் அல்லது நெய் எனப் பொருள். இது மேற்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இயற்கையாக வளரக் கூடியது. சோயா பீன்ஸ் எண்ணெய்க்கு அடுத்தப்படியாக ஆப்பிரிக்கன் பனை எண்ணெயே உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பாமாயில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்து கல்லறையில் பாமாயில் இருப்பதைத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பாமாயிலை மனிதன் பயன்படுத்தினான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. மேலும் வணிகர்கள் மூலமாக எண்ணெய்ப் பனையை எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனத் தெரிகிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் இது சமையல் எண்ணெயாகப் பயன்படுகிறது. ஐரோப்பிய வியாபாரிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாமாயிலை விலைக்கு வாங்கி ஐரோப்பாவில் விற்பனை செய்தனர். ஐரோப்பாவிலும் சமையலுக்கு இந்த எண்ணெய்யை உபயோகிக்கின்றனர். 1700 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பாமாயிலை மருந்தாகவும், க்ரீமாகவும் பயன்படுத்தினர்.

இது சமையல் எண்ணெயின் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கிறது. விலைக் குறைவாகவும், எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இந்த எண்ணெய் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளின் எண்ணெய் பற்றாக்குறைக்கு தீர்வாக பாமாயில் இருக்கிறது. ஏழை மக்களே பாமாயிலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

வளரியல்பு

ஆப்பிரிக்க எண்ணெய்ப் பனை மரமானது 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஓலைகள் எனப்படும் இலைகள் 3 – 6 மீட்டர் நீளம் இருக்கும். இளம் மரம் வருடத்திற்கு 18 – 30 இலைகளை உருவாக்கும். ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்குப் பிறகு பழுத்து உதிர்ந்து விடும். இது பசுமை மாறா மரம். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும்.

மரம் நட்ட நான்கு ஆண்டுகளில் பூக்கத் தொடங்குகிறது. ஒரே மரத்தில் ஆண், பெண் பூக்கள் தனித்தனி பாளையில் காணப்படும். ஒரு சில மரங்களில் மட்டும் ஆண், பெண் பூக்கள் ஒரே பாளையில் தோன்றுவதும் உண்டு. ஒரு பாளையில் அல்லது மஞ்சரியில் பல நூறு பூக்கள் மலரும். காய்கள் 5 – 6 மாதத்தில் முதிர்ச்சி அடையும். காய்கள் நெருக்கமாக ஒரு கொத்தாகக் காணப்படும். ஒரு குலையில் 150 முதல் 200 வரை காய்கள் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவை. ஆகவேதான் இதை செம்பனை என்கின்றனர்.

இது தென்னை மரத்தைப் போன்று வருடம் முழுவதும் பலன் தரும். சுமார் 80 – 100 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக வளர்ந்து பலன் தரும். முதல் 25 ஆண்டுகள் அதிக கனிகளைக் கொடுக்கும். கனிகள் உருண்டையாக இருக்கும். கனியினுள் கருநிறத்தில் கொட்டைகள் உள்ளன.

எண்ணெய்

இந்த பனை மரத்தின் கனியில் இருந்து இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கின்றது . கனியின் சதைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்து அதிலிருந்து கச்சா பாமாயில் எடுக்கின்றனர். இது நிலையான வெண்ணெய் போன்று செம்மஞ்சள் நிறம் உடையது. இது கொழுப்பு எண்ணெய் ஆகும். ஒரு விதமான இனிய மணம் வீசும். இதை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தியப் பின் கிடைப்பதுதான் பாமாயில். இது சமையல் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய் ஆகும். இதே எண்ணெயை மீண்டும் சுத்திகரிக்கும் (Refining) போது சிகப்பு நிறம் போய் விடுகிறது. அப்போது அது வெள்ளை நிற பாமாயிலாகக் (White Palmoil) கிடைக்கிறது.

மற்றொரு எண்ணெய் இதன் கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. பருப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய் மஞ்சளாகத் தேங்காய் எண்ணெய் போல இருக்கும். இது பருப்பு எண்ணெய் (Kernel) என்று அழைக்கப்படுகிறது. பருப்பில் 18 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது.

உற்பத்தி

எண்ணெய்ப் பனையானது ஒரு ஹெக்டேரில் இருந்து வருடத்திற்கு 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கின்றது . மற்ற எண்ணெய் தரும் வித்துகளை விட பல மடங்கு எண்ணெய் தருகிறது. ஒரு ஹெக்டேரில் பயிரிடப்படும் நிலக்கடலையில் இருந்து 375 கிலோ எண்ணெய் கிடைக்கிறது. கடுகிலிருந்து 560 கிலோவும், சூரிய காந்தியில் இருந்து 545 கிலோவும், எள்ளில் இருந்து 100 கிலோவும், தேங்காயில் இருந்து 970 கிலோ என்கிற அளவுகளில் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் எண்ணெய்ப் பனையிலிருந்து 4000 முதல் 6000 கிலோ எண்ணெய் கிடைக்கிறது.

2016 ஆம் ஆண்டில் பாமாயில் உற்பத்தி என்பது உலகளவில் 62.6 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியாவே உலகளவில் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அதற்கடுத்த இடத்தில் மலேசியா, தாய்லாந்து, கொலம்பியா உள்ளன. 2015 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி ஒரு மனிதன் ஆண்டிற்கு 7.7 கிலோ பாமாயிலைப் பயன்படுத்துகிறான் எனத் தெரிய வருகிறது.

பயன்கள்

பாமாயிலில் பால்மிட்டிக் அமிலம் (Palmitic acid) உள்ளது. ஆகவேதான் இதற்குப் பாமாயில் எனப் பெயர் வந்தது. இந்த எண்ணெயில் அதிக கரோட்டின், அல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவை உள்ளன. ஆகவேதான் எண்ணெய் அடர்ந்த சிகப்பு நிறத்தில் உள்ளது. இதில் கொழுப்பு அமிலங்கள், கிளைசரால், நிறைவுறாக் கொழுப்பு போன்றவை உள்ளன. இதில் அதிகக் கொழுப்புச் சத்து இருக்கிறது. 100 கிராம் எண்ணெய்யில் 884 கிலோ கலோரி அடங்கியுள்ளது.

இதில் 10 சதவீதம் லினோலியிக் அமிலம் இருப்பதால் கரோட்டின் மிக்கது. இது வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோயைத் தடுக்கிறது. சோப்பு, சாக்கலேட்டு, மருந்து, வாசனைப் பொருள் செய்ய உதவுகிறது. ஐஸ் கிரீம், செயற்கை வெண்ணெய் கொழுப்பு, சமையல் எண்ணெய், இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாகிறது. பாமாயிலில் இருந்து மெத்தில் மற்றும் பயோடீசலும் தயாரிக்கப்படுகிறது.

எண்ணெய்ப்பனை ஒரு ஆண்டிற்கு எக்டரில் 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கக்கூடிய ஒரு மரப்பயிராகும். இது மற்ற எண்ணெய் வித்துபயிர்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக எண்ணெய் மகசூல் தரவல்லது.

பொதுவாக ஒரு எக்டரில் பயிரிடப்படும் கடலையில் இருந்து 375 கிலோ அளவும், கடுகு பயிரிலிருந்து 560 கிலோவும், சூரியகாந்தியிலிருந்து 545 கிலோவும், எள்ளிலிருந்து 160 கிலோவும், தேங்காயிலிருந்து 970 கிலோ அளவுக்கு தான் எண்ணெய் கிடைக்கிறது.

ஆனால, ஒரு எக்டரில் பயிரிடப்படும் எண்ணெய் பனையிலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ எண்ணெய் கிடைக்கிறது இந்த மரம் நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது.

எண்ணெய்ப்பனை மரத்திலிருந்து இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கிறது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சுத்திகரிக்கப்படாத பாமாயில் எனவும், பழத்தில் உள்ள கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பருப்பு எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

· எண்ணெய்பனை நட்டு மகசூலுக்கு வந்ததுமுதல் 25 ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியது.

· குறைவானசாகுபடி செலவு, பழக்குலை உற்பத்திசெலவீனம் டன் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை மட்டுமே.

· வேலைஆட்கள் மிகவும் குறைவு. ஆகவேசிறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை வெளிஆட்கள் உதவியின்றி தாங்களே முழுமையாக பராமரிக்கலாம்.

· மழை, வெள்ளம், களவு, சேதம் கிடையாது.

· பூச்சிமற்றும் நோய் தாக்குதல் குறைவு.

· தண்ணீர்வசதி மற்றும் உர நிர்வாகத்திற்கேற்றமகசூல் கூடும்.

· முதல்இரண்டு ஆண்டுகளுக்கு ஊடுபயிர் செய்து உபரி வருமானம்பெறலாம்.

· எண்ணெய்பனை கன்றுகள் அரசு மானிய விலையில்கன்று 20 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

· எண்ணெய்பனை சாகுபடிக்கு நான்கு ஆண்டுகளில் அரசுமானியம் எக்டர் ஒன்றிற்கு 15 ஆயிரத்து500.

· அரசுமானியத்துடன் சொட்டு நீர் பாசனம்அமைத்து பயன் பெறலாம்.

· உத்தரவாதமானபழக்குலைகள் கொள்முதல் மற்றும் உடனடியாக பணப்பட்டுவாடா.

· தேவைப்பட்டால்பனை பராமரிப்புக்கு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நாவாய்ப்பூச்சி: கார்வல்ஹோயா

அரிக்கே நத்தைப்புழுக்கள்: தோசீயா

அன்டமாணக்கா காண்டாமிருக வண்டு: ஒரைக்டஸ்

ரைனாசிரஸ் சிலந்தி: டெட்ராநைகஸ் பைர்சி

செந்தலைக் கூன் வண்டு: ரின்கோஃபோரஸ் ஃபெருஜீனியஸ்

மைனா: அகரிடோதிரிஸ் டிரிஸ்டிஸ்
டிரிஸ்டிஸ்

மாவுப்பூச்சி: டிஸ்மிகாக்கஸ் பிரேவிபஸ்

எலி: டட்டிரா இன்டிகா

பாமாயில் மரம் அதிக அங்கக பொருட்களையும், ஆண், பெண் பூக்கள் மற்றும் குலைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வளர்ச்சியடைவதால் அதிகளவு ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் பண்பை கொண்டுள்ளது. ஆகையால் இம்மர சாகுபடிக்குத் தேவையான அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களுடன் இரண்டாம் நிலை சத்துக்களான மெக்னிசீயம், கால்சியம், மற்றும் நுண்ணூட்டங்களான போரான், மாங்கனீசு போன்றவைகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் இடுவது அவசியமாகும்.

மகசூல் அதிகரிக்க உதவும் தேனீ வளர்ப்பு

ஒரு நாள் சிறப்பு பயிற்சி!
மேற்கூறப்பட்ட சத்துக்களில் குறைபாடு ஏற்படின், மரத்தின் வளர்ச்சியிலும், மகசூலிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படும்.

முக்கிய ஊட்டச் சத்துக்களின் செயல்பாடுகள்

தழைச்சத்து

செல்லில் காணப்படும் புரோட்டோபிளாசம், புரதம், அமினோ அமிலங்கள் அல்கலாய்டுகள் மற்றும் குளோரோபில்; போன்றவைகள் உருவாக்கப்பட தழைச்சத்து மிகவும் அடிப்படையாகின்றது. இலைகளின் பரப்பு, ஆண், பெண் பூக்களின் விகிதம் மற்றும் குலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகின்றது.

மணிச்சத்து

திசுவளர்ச்சியில் நியுக்ளிக் அமிலத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது, வேர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், பழக்குலைகளின் முதிர்ச்சிக்கும் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தழைச்சத்தைப் போன்று இலைகளின் வளர்ச்சி, எண்ணிக்கை, அங்ககப் பொருட்களை அதிகரிக்க பயன்படுகிறது.

சாம்பல்சத்து

முக்கிய வேதியல் செயல்பாட்டில் கிரியா ஊக்கியாக செயல்பட்டு ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்தி பழக்குலைகள் உருவாகவும் நீராவிப் போக்கை கட்டுப்படுத்துவதலிலும் பங்கு வகிக்கின்றது. தழை, மணிச்சத்துக்கள் போன்று இலைகளின் உற்பத்தி, எண்ணிக்கை, பரப்பளவு, அங்ககப் பொருட்கள் போன்றவைகளை அதிகரிக்கவும், ஆண், பெண் பூக்களின் விகிதம், பழக்குலைகளின் எண்ணிக்கை, எடை போன்றவற்றை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

இரண்டாம் நிலை சத்துகள்

மெக்னீசியம்: பச்சையத்தில் ஒரு பாகமாகி ஒளிச்சேர்க்கையை அதிகரித்து கொழுப்புசத்து உற்பத்தியை பெருக்கி குலைகளின் எண்ணிக்கை விகிதத்தை அதிகப்படுத்துகின்றது.

கால்சியம்: வேர் வளர்ச்சிக்கும், தழைச்சத்து சாம்பல் சத்து போன்ற ஊட்டச் சத்துக்ககளை உறிஞ்சும் பண்பை அதிகரிக்கவும் பயன்படுகின்றது.

மாங்கனீஸ்: பச்சையத்தின் உற்பத்தி ஈடுபட்டு ஒளிச்சேர்க்கையை அதிகரிப்பதோடு, நொதிகளின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.

இரும்புச்சத்து: பச்சையத்தின் செலய்பாட்டிலும் நொதிகளின் செயல்பாட்டிலும் முக்கிய கிரியா ஊக்கியாக செயல்படுகின்றது. மேலும் சுவாதித்தலை அதிகப்படுத்துகின்றது.

துத்தநாகம்: புரதம் மற்றும் பச்சையத்தின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பச்சைய உற்பத்தியில் பங்கு வகிப்பதோடு பெரும்பாலான தாவர செயல்பாடுகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

மாலிப்டினம்: நொதிகளின் ஒரு பாகமாகி தழைச்சத்து மாற்றத்தில் நைட்ரேட்டால் மாற்றம் செய்யும் பணியைச் செய்கின்றது.

போரான்: பெரும்பாலான தாவரச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது.

தாமிரம்: தாவரச் செயல்பாடுகளில் தொடர்புடைய நொதிகள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் குளோரோ்பில் நிறமி உருவாக காரணமாக விளங்குகிறது.

கந்தகம்: புரதத்தின் ஒரு பகுதியிலும் பச்சைய உற்பத்தியிலும் மாவுச் சத்து வளர்ச்சிதை மாற்றத்திலும் பெரும்பங்கு வகிக்கின்றது. எண்ணெயின் அளவை அதிகரிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றது.

சமநிலை உரமிடுதல்

உரங்கள் இடும்போது அவையனைத்தும் மண்ணின் சத்து நிறை,. குறைகளுக்கு ஏற்றவாறு சமச்சீராக இடுகிறோமா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தழைச்சத்து அதிகமாகி மணிச்சத்தில் குறைபாடு ஏற்படின் மரத்திற்கு வேண்டிய மற்ற ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். சாம்பல் சத்து குறைவாக உள்ள நிலங்களில் அதிக தழைச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இடுவதால் சமநிலை ஊட்டச் சத்துக்கள் கிரகிப்பு பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றுகிறது.

மரத்தின் வயது- முதலாமாண்டு (தழைச்சத்து 400கிராம், மணிச்சத்து 200கிராம், சாம்பல்சத்து 400 கிராம், மெக்னீசியம் சல்பேட் 125 கிராம்) இரண்டாமாண்டு (தழைச்சத்து 800 கிராம், மணிச்சத்து 400 கிராம், சாம்பல்சத்து 800 கிராம், மெக்னீசியம் சல்பேட் 250 கிராம்)மற்றும்மூன்றாமாண்டிலிருந்து (தழைச்சத்து 1200 கிராம், மணிச்சத்து 600 கிராம், சாம்பல்சத்து 1200 கிராம், மெக்னீசியம் சல்பேட் 500 கிராம்) உர அளவு தற்காலிகமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

தோட்டத்தில் ஆறாமாண்டிலிருந்து தோராயமாக 20-25 டன் பழக்குலைகள் அறுவடைக்கு வரும் காலங்களில் உற்பத்தி வீதத்திற்கு தகுந்தவாறு கூடுதலாக 20 சதவீத ஊட்டச் சத்துக்கள் அதிகரிப்பட வேண்டும். போரான் பற்றாக்குறை அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு 100 கிராம் போராக்ஸ், இரு முறை பிரித்து மண்ணில் இடுவது நல்லது. இரசாயன உரங்களோடு மரத்திற்கு 50 கிலோ பசுந்தாள் உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது 3 கிலோ வேப்பம் புண்ணாக்கு வருடத்திற்கு இரு முறை பிரித்து இடுவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது.

உரமிடும் முறைகள்

வட்டப்பாத்தி முறை

மரத்தின் அடிப்பகுதியிலிருந்து சுற்றிலும் 50 செ.மீ இடைவெளிவிட்டு வட்டப்பாத்தியில் நன்கு கலந்த உரக்கலவையை இடவேண்டும். உறிஞ்சும் வேர்கள் மண்ணின் மேல் மட்டத்தில் இருப்பதினால் ஊட்டச்சத்துக்களையும், நீரையும் உறிஞ்சுவதற்கு இம்முறை பொறுத்தமானதாகும். உரம் இடுவதற்கு முன்பு மண்ணை இலேசாகக் கிளறி விட்டு, உரமிட்ட பிறகு உடனே நீர்பாய்ச்சவேண்டும். வேர்கள் பெரும்பாலும் தலையின் 30 செ.மீ ஆழத்தில் அதிகமாக இருப்பதால் ஆழமாக வெட்டி உரமிடுவதை தவிர்க்கவேண்டும்.

வரிசைகளுக்கிடையே உரமிடும் முறை

வளர்ந்த மரத்தின் வேர்கள் ஒன்றோடொன்று இரு வரிசைகளுக்கிடையே இணைந்துவிடுவதால் அப்பகுதியில் மண்ணை இலேசாக கிளரி 2 மீட்டர் அகலத்தில் உரங்களை இட வேண்டும். இவ்வாறு செய்வதால் வளரும் இளம் உறிஞ்சு வேர்கள் சத்துக்களை நேரடியாக எடுத்துக் கொள்ள ஏதுவாகிறது.

நீருடன் கலந்து உரமிடல்


சொட்டு நீர் பாசனம் உள்ள தோட்டங்களில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போன்ற ஊட்டச் சத்து கலவையை நீரில் கரைத்து சொட்டு நீர்ப்பாசன குழாய்கள் மூலமாக செலுத்தப்படுகிறது. சாதாரணமாக கிடைக்கும் உரங்களை நீரில் கலக்கியும் இம்முறையின் கீழ் பயன்படுத்தலாம். இவ்வாறு கொடுக்கும் பொழுது வடிகட்டி உபயோகிப்பதால் உரக்கலவை குழாய்களை அடைக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

எத்தனை முறை உரமிட வேண்டும்


பாமாயில் மரம் ஒரு இறவைப் பயிராக உள்ளதாலும், ஆண்டுதோறும் பழக்குலைகள் உற்பத்தி செய்வதாலும் மரத்திற்கு ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைக்கும் விதத்தில் உரமிடல் வேண்டும். பொதுவாக ஆண்டிற்கு நான்கு அல்லது மூன்று முறை சமமாகப் பிரித்து உரமிடுவது நல்லது.

மணல் கலந்த நிலங்களில் குறைந்த அளவு உரத்தை குறுகிய கால இடைவெளியில் இடுவதால் உரம் வடிந்து வீணாவதை தடுக்கலாம். செப்டம்பர்-அக்டோபர், அக்டோபர்-நவம்பர் போன்ற மாதங்களில் பசுந்தாள், தொழு உரம் இடுவதற்கு ஏற்ற பருவங்களாகும். பசுந்தாள், தொழு உரங்கள் கோடை காலங்களில் மூடுபொருளாகப் பயன்பட்டு மண்ணின் ஈரப்பதத்தையும், தட்பவெப்பநிலையையும் பராமரிக்க உதவுகின்றது. கோடை காலங்களில் இரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்து, ஜிப்சம் இடுதல்

அமிலத் தன்மையுள்ள மண்ணில் சுண்ணாம்பை வருடத்திற்கு ஒரு முறை இடுவதினால் அமிலத்தன்மைக் குறைக்கப்படுகின்றது. காரநிலை அதிகமுள்ள மண்ணில் ஜிப்சம் இடுவதினால் நிலத்தின் காரநிலை குறைகின்றது. இவையன்றி பூண்டுகள், செடிகள் போன்ற பசுந்தாள்களை வளர்த்து உழுதுவிடுவதால் காரநிலை குறைக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இம்முறையைப் பின்பற்றுவதினால் மண்ணின் தன்மையை ஒரளவிற்கு மாற்றியமைக்க முடியும்.

உயிரியல் உரங்கள்

நுண்ணுயிர் உரங்களை மண், விதை, இரசாயன உரம் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தப்படுகிறது. ரைசோபியம், அசோலா, அசோஸ்பைரில்லம் ஆகியன நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் பாக்டீரியாக்களாகும். மண்ணில் கரையாத பாஸ்பேட்டுக்களை கரையும் பாஸ்பேட்களாக மாற்றுவது அஸட்டோபாக்டர் என்னும் பாக்டீரியாவாகும்.

பாமாயில் மரத்திலிருந்து அபரிதமான அங்ககப் பொருட்கள் மண்ணிற்கு செல்வதினால் இவ்வுயிர் உரங்களைப் பயன்படுத்தி கூட்டு கரிமப் பொருட்களை நேரடியாகப் பயன்படும் ஊட்டச் சத்து வடிவிற்கு மாற்றி மரத்திற்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மண்புழு உரம் (அல்லது ) வெர்மிகம் போஸ்ட்

வெர்மிகம் போஸ்டை தொழு உரத்துடன் கலந்து வட்டப்பாத்திகளில் இடுதல் சமீபகாலமாக பிரசித்தி பெற்ற தொழிற் நுட்பமாகக் கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

பாமாயில் மரத்தின் இலைகள், ஆண், பூக்கள், காலியான குலைகள் நார்கள், ஒடுகள், ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுப் பொருட்களை வீணாக்காமல் கரிமச்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் தழை, மணி. சாம்பல் சத்து அடங்கிய இரசாயன உரங்களை ஏறத்தாழ 50% குறைத்து இடுவதற்கு ஏதுவாகிறது. கரிம சுழற்சி முறையோடு பசுந்தாள் உரங்களை இடுவதால் மரங்களுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்தை கொடுப்பதோடு மண்ணின் வளத்தைப் பாதுகாத்து சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடையாமல் பாதுகாக்க முடிகிறது.

கலப்படம்:

பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தைவைத்தே கணித்துவிடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை பாமாயிலாக மாற்றும்போது, எண்ணெய் கலப்படமாகிறது.

இந்த ரீஃபைண்டு ஆயில், பிஸ்கட், கேக், பீநட் பட்டர், சிப்ஸ் போன்றவை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இது, உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும்.

உபயோகம்:

பேக்கரிப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய பங்கு பாமாயிலுக்கு உண்டு.

மீதமிருக்கும் சக்கையை விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் Deutsche Welle பத்திரிகை தயாரித்த ஆவணப்படம் ஒன்றில், ஜெர்மன் ஆல்ப்ஸில் உள்ள பால் பண்ணைகளில், கன்றுகளுக்கு உணவளிக்க பாலுக்கு மாற்றாக பாமாயில் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டிருந்தனர்.

சில இடங்களில், இதிலுள்ள அதிகப்படியான மீத்தைல்-எஸ்தர் வேதியியல் பொருள்களை உபயோகித்து, பயோ-கேஸாகவும் பயன்படுத்துகிறார்கள்.

இதில் ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மை (Anti-Microbial Substance) இருப்பதால், இதைக் காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

ஆரோக்கிய பலன்கள்:

உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றும்.

இதய பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடலில் வைட்டமின் ஏ அளவை அதிகரிக்கும்.

சரும ஆரோக்கியம் காக்கும்.

இந்த நற்குணங்கள் அனைத்தும் தூய சிவப்பு பாமாயிலில் மட்டும்தான் உள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids) அதிகமுள்ளது என்பது மிகப் பெரிய குறைபாடு."


Share Tweet Send
0 Comments
Loading...