MGR பிறந்த தினம் இன்று...

MGR பிறந்த தினம் இன்று...

🔸புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

🔸இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.

🔸சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

🔸1960ஆம் ஆண்டு இவர் பத்மஸ்ரீ விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

🔸மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, தன்னுடைய 70வது வயதில் மறைந்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...