இன்னலை நீக்கும் எலுமிச்சை தீபம்!

இன்னலை நீக்கும் எலுமிச்சை தீபம்!

எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சைப் பழத்துக்கு தீய சக்திகளை விரட்டுகிற சக்தி உண்டு என்பது ஐதீகம். கண் திருஷ்டி முதலானவை நீங்குவதற்கும் எலுமிச்சையின் சக்தி அளப்பரியது. அதனால்தான் சில வீடுகளில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சைப் பழம் கொண்டு, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்.

கார்த்திகையில்... எலுமிச்சை தீப வழிபாடு!

எலுமிச்சை தீப வழிபாடு என்பது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. கார்த்திகையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அம்மனுக்கு செவ்வாய், வெள்ளியில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்தான். குறிப்பாக, எலுமிச்சையில் தீபமேற்று வழிபடுவது இன்னும் விசேஷம்.

வீட்டில் சிலருக்கு அடிக்கடி நோய் வந்து அல்லல்பட்டாலும் வயிறு முதலான உபாதைகளில் தவித்து மருகினாலும் எலுமிச்சையே முதல் முழு நிவாரணமாகத் திகழ்கிறது. இதன் ஒரு துளியே அமிர்தம் என்று போற்றுகிறார்கள் சான்றோர்கள்.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.

ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

ஸ்ரீதுர்கை வழிபாட்டில், மிக முக்கியமானது எலுமிச்சை தீப வழிபாடுதான் என்பது அறிந்ததுதான். ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையான 4.30 முதல் 6 மணிக்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும். செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையான மதியம் 3 முதல் மாலை 4.30க்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், குடும்பப் பிரச்சினை நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகும்.

வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12க்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும். ஐஸ்வரியம் பெருகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்கார்த்திகை தீபநாளில், எலுமிச்சை தீபத்தை எப்போதும் ஏற்றலாம். வழிபடலாம். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் சுபிட்சம் நிலவும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்தச் சொல்லுக்கு ‘முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க’ என்று பொருள்.

துர்க்கை வழிபாடு:

அன்னை துர்க்கா தேவியை எந்நாளும் வழிபடலாம். இருந்த போதும் ராகு கால வேளையில் வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் ராகு காலத்தில் அன்னை துர்க்கா தேவியின் ஆட்சியே பலம் பெறுகிறது. கிரகங்களில் ராகு கேது தோஷங்களினால் பாதிக்கப்பட்டிருந்தால், ராகு கால வேளையில் அன்னை துர்க்கையை சரணடைந்து விளக்கேற்றி வழிபட்டால் சகல தோஷங்களிலிருந்தும் காப்பாற்றுவாள்.

துர்க்கை வழிபாட்டில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முக்கியமாக கருதப்படுகிறது. குடும்பத்தில் தீராத பிரச்னைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம், செய்வினை பிரச்சினைகள், திருமண பாக்கியம், குழந்தைப் பாக்கியம் என எந்த பிரச்சி னையாக இருந்தாலும் அன்னை துர்க்கையின் சன்னதியில் எலுமிச்சை விளக்கேற்றி மனமுருக வேண்டினால் துர்க்கை அம்மன் நம்மை காத்து ரட்சிக்கிறாள்.

ஆன்மீகத்தில் எலுமிச்சைக் கனி:

சக்தி ஆலயங்களில் தேவியின் முன்பாக உள்ள சூலங்களிலும், காவல் தெய்வங்கள் அருகில் இருக்கும் சூலங்களிலும் எலுமிச்சை சொருகியிருப்பதை பார்த்திருப்போம். நமது மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு பதிலாக ஏன் எலுமிச்சைக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஆன்மீகத்தில் எலுமிச்சையை தேவ கனி என்று அழைப்பார்கள். மற்ற கனிகளைக் காட்டிலும் மனித எண்ணங்களை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு என்பதால் சூலத்தில் குத்தப்பட்டிருக்கும். நீண்ட கால பிரச்னைகள் தீர்வதற்கு அம்மனுக்கு கனி மாலை சாத்தி வழிபாட்டால் கைகூடும் என்பது நம்பிக்கை. அதற்கு எலுமிச்சை கனி மாலையைத் தான் அம்மனுக்கு சாத்துவார்கள். எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆகவே இவ்வளவு சிறப்பம்சங்கள் எலுமிச்சை கனிக்கு இருப்பதால் தான் ஆன்மீகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றும் முறை:

துர்க்கையின் சன்னதியில்,  ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகத் தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு இருக்க வேண்டும்.

இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்கி சார்த்த வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் அன்னை  பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்றுவது கூடாது.

வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும். வீட்டில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடக் கூடாது.

துர்கா காயத்ரி மந்திரம்:

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்.

எலுமிச்சைக்கு மிக பெரிய சக்தி இருப்பதால் தான் அது திரி சூலத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. - Advertisement - தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் தடுக்க, எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதை வாசற்கதவின் இருபுறமும் வைப்பது வழக்கம். அதேபோல் கண்திருஷ்டி விலக எலுமிச்சை பழத்தை சுற்றிப்போடுவதும் வழக்கம். இப்படி பல அபூர்வ பலன்களை கொண்ட எலுமிச்சையால் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்சனைகள் தீரும்.

ஞாயிறு மாலை 4.30 – 6.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் தீராத நோய்கள் தீரும். செவ்வாய் கிழமை மாலை 3.00 4.30 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வெள்ளிக்கிழமை காலை 10.30 – 12.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் 2 எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டினால் சந்தோசமாக வாழ வழி பிறக்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...