ஏற்காடு- ஏழைகளின் ஊட்டி

ஏற்காடு- ஏழைகளின் ஊட்டி

ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஏற்காடு என்ற பெயர் பின் வரும் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து வந்தது.அதாவது ‘ஏரி’ மற்றும் ‘காடு’ என்ற இரண்டு சொற்கள் ஏற்காடு என்று பெயர் வர காரணமாயிற்று.

ஏற்காடு,  இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் வட்டத் தலைமையிடமாகவும் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு செல்பவர்களுக்கு ஊட்டி செல்லும் அளவுக்கு கூட செலவு ஆகாது.  ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு பல விஷயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின்
உதகமண்டலம்' என்று குறிப்பிடப்படுகிறது.

ஏற்காடு ஏரி ,மரகத ஏரி என்றும் அழைக்கப்படும்.
மரகத ஏரி தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. Emerald lake என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி,ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி.ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.

இதைச்சுற்றிலும், மான்பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா, ஹோட்டல் தமிழ்நாடு போன்றவைகளால் சூழப்பட்டுள்ளது. படகு சவாரி மிக ரம்மியமானதாகும்.அண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கொடைவிழாவின் போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள
இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும்.

இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்கா அதிக தாவரங்களின் தொகுப்புடன் உள்ளது. இங்கு மணிப்பாறையில் கல்லால் மோதினால் மணிச்சத்தம் கேட்கும்.

இங்குள்ள சுற்றுலா தலங்களில் மக்களை மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும் இடம் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்கா ஆகும். ஏனெனில் மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.

இங்குள்ள பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. இங்கு பட்டு பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் கானலாம். இங்குள்ள ரோஜா தோட்டத்தல் பல வண்ண ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது ஏற்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

லேடி சீட் ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளையும், மேட்டூர் அணை மற்றும் சேலத்தையும் நோக்கியவாறு அமைந்துள்ளன.இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.
இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள  இயற்கை பாறைகளின் தொகுப்பாகும்.

பகோடா காட்சி முனை ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.இங்கு வாழ்ந்த மக்கள்இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.ஏற்காட்டின் கிழக்குமுனையில் அமைந்துள்ள இந்த காட்சிமுனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. பகோடாக்கள் அடியில், அகன்றும் மேலே செல்லச் செல்ல, குறுகியும் இருக்கும். எனவே, இவ்விடம் பகோடா உச்சி என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளிக்கலாம். இது ஏற்காட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும்.

சேர்வராயன் கோவில் சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில்,மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.. இந்த கோவில் குகைக்கோவிலாகும் மே மாதம் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம். மே மாத்த்தில் இங்கு நடைபெறும் திருவிழா மிக வண்ணமயமானதாகவும் ஆயிரகணக்கான மலைவாழ் மக்கள் கொண்டாடுவதாகவும் உள்ளது.இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.

திரிபுர சுந்தரி அம்மன் கோவில் இது ஏற்காட்டில் இருந்து7 கி.மீ தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம் , தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன. மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகள் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.

பரந்த அமைதியான பள்ளதாக்குகளும் அழகிய இயற்கை காட்சிகளையும் உடைய ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல உள்ளன. கோயில்கள் , குகைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது பள்ளதாக்குகளின் ஒய்யாரமான அழகு என்று மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்பதாக ஏற்காடானது அமைந்துள்ளது. இடங்களை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டை சுற்றிலும் மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.

தங்கும் விடுதியை கண்டுபிடிப்பது ஏற்காட்டில் சுலபம். விருப்பங்களை பொருத்து நீங்கள் தேர்வு செய்ய முடியும். பட்ஜெட் ஹோட்டல்கள் முதல் ஆடம்பர தங்கும் விடுதிகள் வரை,ஏன் வீடு போன்ற தங்கும் இடங்கள் கூட உள்ளன.ஏற்காடு சுற்றுலா தலங்கள் மற்ற இடங்களிலிருந்து வித்தியாசமானவை. இங்கு செல்பவர்கள் மிகவும் மகிழ்ந்திருந்து வீடு திரும்ப முடியும்.
ஏற்காடு புகைப்படங்கள் எடுக்கவும், அழகிய சுற்றுலாவை அனுபவிக்கவும், குறைந்த விலையில் , பட்ஜெட் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தகுந்த அழகிய இடமாகும்.
அப்புறம் என்ன யோசனை! ஜாலியா குடும்பத்துடன் ஒரு தடவ போய் பாருங்களேன்.


Share Tweet Send
0 Comments
Loading...