எண்ணிலடங்காத பயன்கள் கொண்ட ஏலக்காய்!

எண்ணிலடங்காத பயன்கள் கொண்ட ஏலக்காய்!

ஏலக்காய் இந்திய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருளாகும். இந்த மசாலா பொருள் உலகளவில் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள கோட் மாலா என்ற நகரம் ஏலக்காய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் இருந்தாலும் இந்த ஏலக்காய் நமது இந்திய கண்டத்தில் இருந்து தான் தோன்றியது.

ஏலக்காய் வகைகள் :

கருப்பு மற்றும் பச்சை பச்சை ஏலக்காய் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான இயற்கை ஏலக்காயும் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் பயன்படுகிறது. கீர், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை பொருளாக பயன்படுகிறது. கருப்பு ஏலக்காய் இது வாசனைக்காக பயன்படுத்தாமல் திண்பன்டங்களில் பயன்படுகிறது. இது தான் கரம் மசாலா பொருட்களிலும் பயன்படுகிறது. இதைத் தவிர இந்த இரண்டு ஏலக்காய்களும் மருத்துவ நன்மைகளையும் அள்ளித் தருகின்றன.

செடியினம்

ஏலம் என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிரிய ஏலக்காய்எலெட்டாரியா (Elettaria), பெரிய ஏலக்காய்அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

இயற்கை நன்மைகள்


1 ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
2 வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
3 ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
4 சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.
5 ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
6 ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
7 அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
8 ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
9 நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.


Share Tweet Send
0 Comments
Loading...