சங்கு முத்திரை

சங்கு முத்திரை

செய்முறை: இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும்.


வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும்.  இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

பலன்கள்:

தைராய்டு நோய் குணமடைகிறது.

திக்கிப் பேசுவது குணமடைகிறது.

குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது. இந்த  முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.

நல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி  அதிகமாகிறது.

உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது. காய்ச்சல் குணமடைகிறது. அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது.

தசை வலுவடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது. மன அமைதி கிடைக்கிறது.

மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது. சங்கு முத்திரையை தொடர்நது செய்து வந்தால் தைராய்டு நோய் குணமடையும்.

தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும். இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.


Share Tweet Send
0 Comments
Loading...