சமான வாயு முத்திரை

சமான வாயு முத்திரை

செய்முறை:

 1. விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.
 2. கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
 3. தலை முதல் கால் வரை உடலில் உள்ள எல்லா டென்ஷன், மன அழுத்தம் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
 4. இப்போது கண்களை திறக்கவும்.
 5. நமது கட்டை விரலுடன் மற்ற நான்கு விரல்களையும் குவித்து இணைக்க வேண்டும்.
 6. விரல்களுக்கு இடையே ஒரு வெற்றிடம் உண்டாகும் படி செய்யவும்.
 7. இரு கைகளிலும் இதே போல் செய்யவும்.

நேரம்:

 1. முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
 2. பின் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யவும்.
 3. பின் சாதாரண நிலைக்கு வரவும்.

பலன்கள்:

 1. உடலில் பஞ்ச பூதங்களும் சமமாக இயங்கும்.
 2. நோயற்ற வாழ்வு தரும்.
 3. துணிவு, விடாமுயற்சி பண்புகள் வளரும்.
 4. மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.
 5. சோம்பல் நீங்கும்.
 6. மன சோர்வு நீங்கும்.
 7. தீய உணர்வுகள் தாக்காது.
 8. மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு பாய்கிறது.

Share Tweet Send
0 Comments
Loading...