பழமையான வரலாற்றில் இடம்பெற்றுள்ள இந்த சியா விதைகளின் பெருமையை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். சியா விதையை மாயன் காலத்தில் இருந்தே பயன்படுத்தி வருகின்றனர். மாயன்களின் மொழியில் சியா என்பதற்கு "பலம்" என்று அர்த்தமாம். பல வகையான ஊட்டச்சத்துக்களை இந்த சியா விதைகள் கொண்டுள்ளது.
சியா விதைகள் புதினா குடும்பத்தை சார்ந்ததாம். இவை பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், இவற்றின் நன்மைகள் பெரியதாக இருக்கிறதாம். 28 கிராம் விதைகளில் உள்ள ஊட்டசத்துக்கள் இதோ... புரதம் 4.4 g கால்சியம் 17 mg பொட்டாசியம் 44.8mg சோடியம் 5.3mg ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 4915mg ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் 1620mg பாஸ்பரஸ் 265mg
சர்க்கரை நோயை தடுக்கும் சியா
சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளலாமாம். அமெரிக்கா வேளாண்மை ஆராய்ச்சியில் சர்க்கரை நோயின் மருத்துவத்தில் இந்த சியா விதைகள் முக்கிய இடம் பிடிக்கிறதாம். மேலும், நல்ல பசியை தூண்டி மலச்சிக்கலை தடுக்குமாம்.
புற்றுநோய்க்கு
இந்த சியா விதையில் alpha-linoleic acid என்கிற அமிலங்கள் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிற எண்ணெய் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை தடை செய்ய பயன்படுகிறது.
குண்டு உடல் இளைக்க...
இந்த சியா விதைகளை மிக முக்கியமாக உடல் பருமன் இருப்பவர்கள் பயன்படுத்துவர். உடல் எடையை குறைக்க மற்றவற்றை காட்டிலும் இந்த சிறிய சியா விதைகள் உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. தினமும் 25 to 38g சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் அவை பல கிலோக்களை உங்களின் உடலில் இருந்து குறைத்து விடுமாம்.
எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க
எதிர்ப்பு உடலில் குறைவாக இருப்பதால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கபடுகிறதா..? இந்த கவலையை சரி செய்ய சியா விதைகள் போதுமே. இவற்றில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடண்ஸ் உள்ளதாம். எனவே, உடலின் செல்களை புத்துணர்வூட்டிநோய் கிருமிகளை எதிர்த்து போராட வைக்கும்.
கொலஸ்டரோலை கச்சிதமாக வைக்க
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த சியா விதைகளில் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலில் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால், இதய நோய்களில் இருந்து நீங்கள் எளிதாக தப்பித்து கொள்ளலாம்.
சுறுசுறுப்பான உடலிற்கு...
நீங்கள் சிறிது வேலை செய்தவுடன் சோர்வாக உள்ளீர்களா..? இனி இந்த சோர்வையெல்லாம் தூக்கி போட்டுவிடும் இந்த விதைகள். மெக்னீசியம், ஜின்க், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்றவை அதிகம் இதில் இருப்பதால் உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். இதற்கு இந்த விதைகளை மில்க்ஷேக்குகளில் கலந்து குடித்தாலே போதும்.
நீண்ட இளமைக்கு...
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது. மேலும், சருமத்தில் உள்ள வறட்சி தன்மையை இவை போக்குகிறதாம். குறிப்பாக இவை சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை காக்கும். மேலும், முகத்தில் உள்ள சுருக்கங்கள், வீக்கங்கள் ஆகியவற்றை குணப்படுத்தும்.
ஹார்மோன்களை சீர்செய்யும் சியா..!
ஒரு நாளைக்கு 20g முதல் 40g அளவு சியா விதையை எடுத்து கொண்டாலே ஹார்மோன் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக இவை serotonin மற்றும் melatonin என்கிற இரு முக்கிய ஹார்மோன்களை சுரக்க செய்து நிம்மதியான தூக்கத்தை தருகிறதாம்
கூந்தலுக்கு நல்லது..
இந்த சியா விதையில் அதிக அளவு புரதமும்,கெராட்டினும் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பீன்ஸை விட 20 மடங்கு புரதம் இதில் உள்ளது. இதில் உள்ள கெராட்டின் கூந்தலை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
பசியின்மைக்கு நல்லது...
அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் நம்முடைய பசியின்மை பிரச்னையை தீர்த்து வைக்கும் சக்தி உள்ளது.