சீனித்துளசியின் மகிமை

சீனித்துளசியின் மகிமை

'சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது’என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று

சீனித்துளசி... சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில்  அழைக்கப்படும்  மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது.இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை' (Candy Leaf), `இனிப்பு இலை' (Sweet Leaf), `சர்க்கரை இலை' (Sugar Leaf) என வேறு பல பெயர்களும் உள்ளன.

பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது.  மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.

இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள்.

இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. ஆனாலும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதுதான் இதன் சிறப்பு.

கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைப்போலத்தான் சீனித்துளசி செடியிலிருந்தும் சர்க்கரை எடுக்கப்படுகிறது. இதன் இலைகளை நன்றாக உலரவைத்து, அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி, அதிலிருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, பொடியாக்கப்படுகிறது. பிறகு அதை அசாம் தேயிலையுடன் சேர்த்து ரெடிமேடு இன்ஸ்டன்ட் டீ பேக்காகக் கொடுக்கிறேன். வட மாநிலங்களில் சீனித்துளசியின் பயன்பாடு அதிகம். இப்போதுதான் இது நம்மிடையே புழக்கத்துக்கு வந்திருக்கிறது. உலக அளவில் Monk Fruit-க்கு அடுத்தபடியாக சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இவை இரண்டில் மட்டுமே ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளன.

வேதிப்பொருள்கள்

சீனித்துளசியில் ஆற்றல் மதிப்பு 357.60 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 17.8 கிராம், கொழுப்பு BDL (DL01), கார்போஹைட்ரேட் 72.33 கிராம் (சீனித்துளசி சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட்-0), நார்ச்சத்து 18.54 கிராம், சோடியம் 18 மில்லி கிராம் ஆக இருக்கும். அதேபோல் வெள்ளைச் சர்க்கரையில் ஆற்றல் மதிப்பு 366 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 16 கிராம், கொழுப்பு  BDL (DL0.1), கார்போஹைட்ரேட் 75.70 கிராம் (வெள்ளைச் சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட் - 36.70), நார்ச்சத்து 16 கிராம், சோடியம் 123 மில்லி கிராம் ஆக இருந்தன.

ஆக, சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ அளவில் இருக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

இனிப்புத் துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்

1.இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.

2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.

3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.

4.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை  டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.

5.இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.

இனிப்பு துளசி இலை இயற்கையாக பயன்படுத்தும் முறை:

சீனி துளசி இலையை உப்பு (அல்லது) எலுமிச்சை நீரில் அலசிய பின்பு 50 gm சீனி துளசி இலையில் 200 ML நீரை ஊற்றி 10 நிமிடம் கொதித்த பிறகு சீனி துளசி தேநீர் ரெடி. பின்பு இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒருவாரம் பயன் படுத்தலாம்.

தேநீர், காபி கொட்டைவடி நீர்க்கு 2 ஸ்பூன் பயன் படுத்ததலாம்.


Share Tweet Send
0 Comments
Loading...