சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம் இன்று ...

சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம் இன்று ...

🌟உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🌟இவர் முதன்முதலாக 15வது வயதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.

🌟டெஸ்ட் போட்டியில் 10க்கும் மேலும், ஒருநாள் போட்டியில் 50க்கும் மேலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும் பல தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

🌟உலக கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு இவரது பிளேயிங் இட் மை வே என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

🌟பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, பாரத ரத்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கௌரவ கேப்டன் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...